என் மலர்

  ரிஷபம் - வார பலன்கள்

  ரிஷபம்

  இந்த வார ராசிப்பலன்

  15.8.2022 முதல் 21.8.2022 வரை

  ஆரவாரம் மிகுந்த வாரம். ராசி அதிபதி சுக்ரன் சகாய, இளைய சகோதர ஸ்தானம் எனும் மூன்றாமிடத்தில் சஞ்சரிப்பதால் புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். அனைத்து காரியங்களுக்கும் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும்.விட்டுப் பிரிந்த உறவுகள் ஒட்டி உறவாடுவார்கள்.

  அக்கம் பக்கம் உள்ளவர்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் நல்ல புகழும், கவுரவமும் உண்டாகும். கஷ்டங்களும், சிரமங்களும் குறையும். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். துடிப்புடன் செயல்பட்டு தொழிலை முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்வீர்கள். லாப குருவால்வியாபாரிகளுக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும்.உத்தியோகஸ்தர்கள் கடமை தவறாமல் உழைப் பார்கள்.எதிர்பார்த்த இடத்தில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

  திருமண முயற்சியில் நல்ல தகவல்கள் கிடைக்கும். புத்திர பாக்கியம் உண்டாகும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும்.பிள்ளைகளுக்கான கல்விச் செலவு அதிகரிக்கும். புதிய எதிர்பாலின நட்பால் தொல்லைகள் உருவாக வாய்ப்பு உள்ளது. தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ரிஷபம்

  இந்த வார ராசிப்பலன்

  8.8.2022 முதல் 14.8.2022 வரை

  பணிச்சுமை அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணப்புழக்கம் சரளமாகும். எதிர்பாராத தன லாபம் உண்டாகும். சுக்ரனே ஆறாம் அதிபதியாக இருப்பதால் வரவிற்கு ஏற்ற செலவும் உண்டு.

  7, 12-ம் அதிபதி செவ்வாய் ராசியில் சஞ்சரிப்பதால் வாழ்க்தைத் துணை தொழில், உத்தியோகத்திற்காக குறுகிய காலம் வெளியூர் அல்லது வெளிநாடு செல்லலாம். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளை அனுசரித்துச் சென்றால் நெருக்கடி நிலையை சமாளிக்க முடியும். 2-ம் அதிபதி புதன் 4-ல் நிற்பதால் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் உண்டாகும்.

  பருவ மழை பொழியும் காலம் என்பதால் பயிர்களுக்கு காப்பீடு செய்வது உத்தமம். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஒத்துழைப்பு சாதகமாக இருக்கும்.தாய், தந்தை மற்றும் உடன் பிறப்புகளின் உதவி கிடைக்கும். தடைபட்ட காதல் திருமணம் சுபமாக நடந்தேறும். கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும்.

  8.8.2022 பகல் 2.37 முதல் 10.8.2022 பகல் 2.58 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிலருக்கு அதிக கண்திருஷ்டியால் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படும். வாழ்க்கை இழந்த பெண்களுக்கு இயன்ற தான தர்மங்களைச் செய்யவும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ரிஷபம்

  இந்த வார ராசிப்பலன்

  1.8.2022 முதல் 7.8.2022 வரை

  பணமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இந்த வாரம் கையில் பணமும் மனதில் மகிழ்ச்சியும் பொங்கி வழியும். குடும்பத்தில் உள்ளவர்களின் அனுசரணையால், குழப்பங்கள் நீங்கி குதூகலம் உருவாகும். உடன் பிறந்தவர்களின் உதவியால் பொருளாதார நிலைகள் உயரும்.

  புதிய வீடு போன்ற அசையாச் சொத்துக்களை வாங்குவதற்கு முன், அதற்குரிய மூலப் பத்திரங்கள், வில்லங்க விவகாரங்கள், பட்டா போன்ற ஆவணங்களை ஆராய்ந்து வாங்குவது நல்லது. சிறு தொழில் புரிபவர்களுக்குத் தேவையான வங்கிக் கடன் கிடைத்துத் தொழிலை விரிவாக்கம் செய்யலாம். புத்திர பாக்கியம் உண்டாகும்.அரசாங்கத் துறைகளின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். கவுரவப் பட்டங்கள், பதவிகள் கிடைக்கும்.

  3-ல் சூரியன் நிற்பதால் சிலரின் கற்பனை வளம் பெருகி, கதை, கவிதை எனத் திறம்பட எழுதிப் புகழ் பெறுவர். பொறாமையால், கண்திருஷ்டியால் நண்பர்களே பகைவராவார்கள்.பெண்கள் தங்கள் செலவைக் குறைத்து சேமிப்பை உயர்த்த முற்பட வேண்டும்.இன்பச் சுற்றுலா போன்ற, இனிய பயணங்களால் இன்பத்தில் திளைப்பீர்கள். வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு குங்கும அர்ச்சனை செய்வது நல்லது.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ரிஷபம்

  வார ராசி பலன்கள்

  25.7.2022 முதல் 31.7.2022 வரை

  விரும்பிய மாற்றங்கள் தேடிவரும் வாரம். லாப அதிபதி குருவால் தொழிலில் ஏற்றம் அதிகரிக்கும். ஆனால் வேலைப் பளு மிகும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த முக்கிய பணிகளை இந்த வாரம் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சிலர் பழைய வேலையை விட்டு புதிய வேலை தேடலாம்.

  2,5ம் அதிபதி புதன் முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் காதலில் நீங்கள் விரும்புபவரின் இசைவு கிடைக்கும். சிலருக்கு செல்போன் தொலையலாம் அல்லது புதிய செல்போன் வாங்கலாம். தாய்வழி உறவுகளால் ஏற்பட்ட மனச் சங்கடம் அகலும். பார்த்துச் சென்ற வரனிடம் இருந்து சாதகமான பதில் வரும்.

  தவணை முறைத் திட்டத்தில் வீட்டு மனை அல்லது தோட்டம் வாங்குவீர்கள். இன்சூரன்ஸ் பாலிசி முதிர்வுத் தொகை கிடைக்கும். சிலர் புதிய பாலிசி எடுப்பார்கள். தந்தைக்கு கண், இருதயம் தொடர்பான சிகிச்சை செய்ய நேரும்.உயர் ஆராய்ச்சி கல்வி படிப்பில் ஏற்பட்டதடைகள்அகலும்.பெண்களுக்கு ஆன்மீகநாட்டம் அதிகரிக்கும். சிலர் ஆன்மீக சுற்றுலா செல்ல திட்டமிடலாம். ஆரோக்கிய பிரச்சினைகள் நீங்கி உடல் சுறுசுறுப்படையும்.பிரதோசத்தன்று சிவனுக்கு சந்தனஅபிசேகம் செய்யவும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ரிஷபம்

  இந்த வார ராசிப்பலன்

  18-7-2022 முதல் 24-7-2022 வரை

  பொருளாதார மேன்மை உண்டாகும் வாரம்.ராசி அதிபதி சுக்ரன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு வரவேண்டிய பணம் விரைவில் வசூலாக வாய்ப்புள்ளது. ஆடம்பர விருந்து, உபசாரங்களில் கலந்து மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த சில ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.

  நல்லதகவல்கள் வீடு தேடி வரும். திருமணத்திற்கு நல்ல ஆடம்பரம், வசதி நிறைந்த வாழ்க்கைத் துணை அமையும். சுபமங்கள நிகழ்விற்குதாராளமானபணச் செலவுகள் ஏற்படும். 3ம் இடத்திற்கு சனி பார்வை இருப்பதால்இடப் பெயர்ச்சி எண்ணம் மிகுதியாகும்.ஞாபக குறைவு ஏற்படலாம்.

  உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுடன் சில விஷயத்தை விடாப்பிடியாகப் பிடித்துக் கொள்வது உங்களுக்கு சிக்கலைத் தரலாம். பெருந்தன்மை யுடன் நடந்து கொள்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பராமரிப்பு இல்லாத கோவில்களுக்கு விளக்கு ஏற்றநல்லெண்ணெய் வாங்கித் தரவும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ரிஷபம்

  இந்த வார ராசிப்பலன்

  11.7.2022 முதல் 17.7.2022 வரை

  நிதி நிலைமை மேம்படும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கு மாறுவதால் தன வரவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருங்காலத்தில் நல்ல வருமானம் தரக்கூடிய இடத்தில் உங்கள் கூடுதல் பணத்தை பத்திரமாக சேமிப்பீர்கள். நீண்ட காலமாக அனுபவித்து வந்த கடன் தொல்லையில் இருந்து முற்றிலும்விடுபடுவீர்கள்.

  அதில் இருந்து நிரந்தரமாக விடுபட வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள சரியான நேரம். பூர்வீகச் சொத்து வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும், மற்றவர்களுக்கு வாக்குக்கொடுப்பதையோ முன்ஜாமீன் போடுவதையோ தவிர்க்கவும். குடும்பத்தினருடன் சமூக நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். நாத்தனாரின் குடும்ப பிரச்சினையை தீர்க்கும் முயற்சியில் சில மன ஸ்தாபங்கள் அதிகரிக்கும். வீட்டின் தோற்றத்தை மேம் படுத்த வீட்டைச் சுற்றி சிறிய மாற்றங்கள் செய்வீர்கள்.

  பணியாளர்களின் திறமைக்கு வெகுமதி கிடைக்கும். பாக்கிய ஸ்தான சனி பகவான் தர்ம காரியங்கள் மூலம் பாக்கிய பலன்களை அதிகரிப்பார். 12.7.2022 காலை 5.15 முதல் 14.7.2022 அதிகாலை 4.32 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உங்கள் குடும்பத்தாருடன் வீண் வாக்கு வாதத்தை தவிர்க்கவும். வெள்ளிக்கிழமை நவகிரக சுக்கிரனை வழிபடவும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ரிஷபம்

  வார ராசி பலன்கள்

  4-7-2022 முதல் 10-7-2022 வரை

  குடும்ப சுமை குறையும் வாரம். தன, குடும்ப ஸ்தானத்தில் புதன் ஆட்சி பலம் பெற்று இருப்பதால்பெண்களின் புத்தி சாதுர்யத்தால் குடும்பத்தில் அமைதி நிலவும். இழுத்து மூடிவிட்டு செல்லும் நிலையில் இருக்கும் தொழில் கூடம் விறுவிறுப்பு அடையும். தொழிலுக்காக வாங்கிய கடனை சிறிது சிறிதாக அடைக்க முயற்ச்சிப்பீர்கள்.

  வராக்கடன்கள் வசூலாகும். வீடு, வாகனம், அலங்கார ஆடம்பர பொருட்கள், உயர் ரக ஆடைகள் நகைகள் என வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். புகுந்த வீட்டாருடன் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறையும்.சிலர் அழகு, அந்தஸ்து, ஆடம்பரம் நிறைந்த அப்பார்ட்மென்ட் வீடு வாங்கி குடியேறுவார்கள். நீதிமன்ற வழக்குகள் தள்ளிப்போகும்.

  ராசி அதிபதி சுக்ரனே 6ம் அதிபதி என்பதால் பணியாளர்களுக்கு வேலைப் பளு அதிகமாகும். உழைத்த கூலி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். யார் வம்பு தும்பும் வேண்டாம் என்று ஒதுங்கி இருப்பது நல்லது. 12ல் ராகு இருப்பதால் பொருளின் தரம், பயன்பாடு, தேவை அறிந்து வாங்கி பயன்படுத்துவது சிறப்பு.

  வீண் செலவுகள், விரயங்கள் இருந்தாலும் சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும். வெள்ளிக்கிழமை அஷ்டலட்சுமிகளையும் வழிபடவும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ரிஷபம்

  வார ராசி பலன்கள்

  27-6-2022 முதல் 03-7-2022 வரை

  எண்ணங்களும் லட்சியங்களும் செயல் வடிவம் பெறும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் 2,5-ம் அதிபதி புதனுடன் ராசியில் சேர்க்கை பெற்ற தால் நிம்மதியாக சுகந்திரமாக செயல்படு வீர்கள். பொருளாதாரத்தில்சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் சீராகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும்.

  பொதுப்பணியில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வாழ்க்கையிலும், தொழிலும், உத்தியோ கத்திலும் முன்னேற்றமான நல்ல மாற்றம் உண்டா கும். வேலையில் உள்ளவர்களுக்கு கடின உழைப் பிற்கான நல்ல பலன் கிடைக்கும். பங்கு வர்த்த கத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தந்தை வழி உறவுகளுடன் ஒற்றுமை மேலோங்கும்.

  தற்காலிக அரசு உத்தியோகஸ்தர்களுக்கு பணி நிரந்தர மாகும். சுப மங்களப் பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும். பிள்ளைகளின் உத்தியோகம், சுப நிகழ்வு போன்றவற்றால் ஆனந்தமும் மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும். ஆரோக்கிய தொல்லைகள் அகலும். வசதியற்றவர்களின் திருமணத்திற்கு இயன்ற உதவி செய்ய வேண்டும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ரிஷபம்

  வார ராசி பலன்கள்

  இந்த வாரம் எப்படி 20-6-2022 முதல் 26-6-2022 வரை

  தன்னம்பிக்கை கூடும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் 2,5-ம் அதிபதிபுதனுடன் இணைவதால் பொது நல சிந்தனை மிகுதியாக இருக்கும்.உறவினர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். இடம் பொருள் ஏவல் பார்த்து வாக்கு பிரயோகம் செய்வீர்கள்.

  அதிகாரமான தெளிவான பேச்சால்தனத்தை பெருக்குவீர்கள்.குடும்பத்தை, குழந்தைகளை காப்பது பற்றியும் சிந்தனை மிகைப்படுத்தலாக இருக்கும். கர்பிணிகளுக்கு இந்த வாரத்தில் குழந்தை பிறக்கும். பிறந்த குழந்தையின் அதிர்ஷ்டத்தால் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். வெளிநாட்டில் வாழ்பவர்கள் பூர்வீகம் வந்து செல்லக்கூடிய சந்தர்ப்பம் உருவாகும்.

  பங்கு சந்தை ஆர்வம் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்து தொடர்பான வழக்குகளில் வெற்றி உண்டாகும். பிள்ளைகளின் உயர் கல்வியை தேர்வு செய்வதில் சிறு குழப்பம் தோன்றி மறையும். அடிமைத் தொழிலில் அதிக உழைப்பில் குறைந்த ஜீவனம் பெற்றவர்களின்வாழ்வாதாரம் உயரும். பிரதோஷத்தன்று பிரதோஷ வேளையில் லட்சுமி நரசிம்மரை கல்கண்டு பால் படைத்து வழிபடவும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ரிஷபம்

  வார ராசி பலன்கள்

  இந்த வாரம் எப்படி 13-6-2022 முதல் 19-6-2022 வரை

  குறுக்கு சிந்தனையில் இருந்து விடுபட்டு நேர்மையாக செயல்படுவீர்கள். தெளிவான திறமையான பேச்சால் நல்ல வியாபார வாய்ப்புகளை அடைவீர்கள்.தொழிலுக்குபுதியபங்குதாரர் கிடைப்பார். தீய பழக்கத்திலிருந்து விடுபடுவீர்கள். கடன் விஷயத்தில் நிறைய மாற்றம் ஏற்படும். சிலருக்கு கேட்ட கடன் கிடைக்கும். சிலர் புதிய வீடு அல்லது வாகனம் வாங்க அட்வான்ஸ் தொகை செலுத்துவீர்கள். இதற்குஉறுதுணையாக தாயார் இருப்பார்.

  சந்திராஷ்டம நாட்களில் அட்வான்ஸ் கொடுப்பதை தவிர்க்கவும். சிலரின் மறுமண முயற்சி வெற்றி தரும். பிள்ளைகள் உயர் கல்விக்காக இடம் பெயரலாம். சிலரின் பிள்ளைகள் வாகனம் வாங்குவார்கள். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் வந்து சேரும்.நெருங்கிய உறவில் மகளுக்கு வரன் அமையும்.

  பங்கு பத்திர ஆதாயம் உண்டு. தந்தைக்கு ஊதிய உயர்வு பதவி உயர்வு கிடைக்கும். அரசியல் ஆதாயம் உண்டு. 14.6.2022 மாலை 6.32 முதல் 16.6.2022 மாலை 5.55வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய காரியங்கள் இழுபறியாகும். பிறர் விசயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406'

  ரிஷபம்

  வார ராசி பலன்கள்

  6.6.2022 முதல் 12.6.2022 வரை

  மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிகளை எடுக்கும் வாரம்.2, 5ம் அதிபதி புதன் சுக அதிபதி சூரியனுடன் ராசியில் இணைவதால் உபரி பணத்தை பூமி, வயலில் முதலீடு செய்வீர்கள். சிலரின் காதல் திருமணத்திற்கு பெற்றோர்களின் அனுமதி கிடைக்கும். ராசி அதிபதி சுக்ரன் 12-ம் இடமான விரய ஸ்தானத்தில் ராகுவுடன் நிற்பதால் சம்பந்தம் இல்லாத அறிமுகம் இல்லாத நபர்களால் ஏமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கவனம் தேவை.

  சிலருக்கு மருத்துவச் செலவு உண்டாகலாம்.சிலர் கவுரவம் அல்லது பெருமையை நிலைநாட்ட வீண் செலவு செய்வார்கள். சிலர் காசி, மானசரோவர் போன்ற தலங்களுக்கு தீர்த்த யாத்திரை சென்று வரலாம். வாரிசுகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்கு தீர்வு கிடைக்கும்.

  பெண்களுக்கு குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு சிறிய முயற்சியில் பெரிய வெற்றி உண்டு. மாணவர்களின் கல்வி ஆர்வத்திற்கு பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிரதோஷத்தன்று சிவனுக்கு பன்னீர் அபிசேகம் செய்து வழிபடவும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ரிஷபம்

  வார ராசி பலன்கள்

  30.5.22 முதல் 5.6.22 வரை

  லட்சியங்களும், எண்ணங்களும் நிறை வேறும் வாரம். மனம் விரும்பும் அனைத்தையும் சாதித்து காட்டுவீர்கள். 2,5ம் அதிபதி புதன் வார இறுதியில் வக்ர நிவர்த்தி பெறுவதால் எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

  பிள்ளைகளின் முன்னேற்றத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வீண் செலவுகள் குறைந்து சேமிப்புகள் அதிகரிக்கும். பதவியில், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நிலை குறைந்து உழைப்பிற்கான பலன் கிடைக்கும். பணி ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் திறமைக்கு தகுந்த நல்ல வேலை கிடைக்கும். தொழில் விருத்திக்காக எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். வீடு, மனை, வாகன எண்ணங்களை நிறைவு செய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் உருவாகும். ராசி அதிபதி சுக்ரன் ராகுவுடன் சஞ்சரிப்பதால் தம்பதிகளிடம் ஈகோ தலை தூக்கும். மோதல் உருவாகும்.

  பெண்களுக்கு தாய், வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. தந்தையின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும். சிந்தித்து நிதானமாக திட்டமிட்டால் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியும். வெள்ளிக்கிழமை ஸ்ரீ தன லட்சுமியை வழிபடவும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×