செய்திகள்

ஸ்டீவன் ஸ்மித் அபார சதம் - உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

Published On 2019-05-26 03:05 GMT   |   Update On 2019-05-26 11:06 GMT
சவுதாம்ப்டனில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் ஸ்டீவன் ஸ்மித்தின் சதத்தால் உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை 12 ரன்னில் வீழ்த்தியது.
சவுதாம்ப்டன்:

சவுதாம்ப்டனில் நடைபெற்ற மற்றொரு உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணியும் இங்கிலாந்தும் மோதியது.

காயம் காரணமாக இங்கிலாந்து கேப்டன் மோர்கன் ஆடவில்லை. அவருக்கு பதில் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் அணியை வழிநடத்தினார். டாஸ்வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர் 43 ரன்னும், ஷான் மார்ஷ் 30 ரன்னும், உஸ்மான் கவாஜா 31 ரன்னும் எடுத்தனர்.

ஓராண்டு தடைக்கு பிறகு அணிக்கு திரும்பிய ஸ்டீவன் சுமித் அபாரமாக விளையாடி சதமடித்தார். அவர் 116 ரன் எடுத்து அவுட்டானார். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 297 ரன்கள் குவித்தது.



தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜேம்ஸ் வின்ஸ் 64 ரன்களும், பொறுப்பு கேப்டன் ஜோஸ் பட்லர் 52 ரன்களும் எடுத்தனர்.

கடைசி வரை போராடிய இங்கிலாந்து அணி 49.3 ஓவர்களில் 285 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதையடுத்து ஆஸ்திரேலியா 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Tags:    

Similar News