செய்திகள்

மோடி தலைமையில் 2 புதிய கேபினட் கமிட்டிகள் அமைப்பு

Published On 2019-06-05 13:56 GMT   |   Update On 2019-06-05 13:56 GMT
நாட்டின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காக இரண்டு புதிய கேபினட் கமிட்டிகளை பிரதமர் மோடி அமைத்துள்ளார். இரு கமிட்டிகளிலும் அமித் ஷா இடம்பெற்றுள்ளார்.
புதுடெல்லி:

நாட்டின் பொருளதார நிலை மற்றும் வேலையின்மை ஆகியவற்றைப் பற்றி ஆலோசித்து சரியான முடிவுகளை எடுப்பதற்காக 2 புதிய கேபினட் கமிட்டிகளை பிரதமர் மோடி இன்று அமைத்துள்ளார். முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான கேபினட் கமிட்டி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான கேபினட் கமிட்டி என 2 கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி தலைமையில் இந்த கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு கமிட்டிகளிலும் உள்துறை மந்திரி அமித் ஷா இடம்பெற்றுள்ளார்.

5 உறுப்பினர்கள் பேர் கொண்ட முதலீட்டுக்கான கேபினட் கமிட்டியில், பிரதமர் மோடி, அமித் ஷா, நிர்மலா சீதாராமன், நிதின் கட்காரி, பியூஷ் கோயல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

10 பேர் கொண்ட வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான கமிட்டியில், பிரதமர் மோடி, அமித் ஷா, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், நரேந்திர சிங் தோமர், ரமேஷ் பொக்ரியால், தர்மேந்திர பிரதான், மகேந்திர நாத் பாண்டே, சந்தோஷ் குமார் கங்வார், ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

இதேபோல் முன்னதாக அமைக்கப்பட்ட பாதுகாப்பு தொடர்பான கேபினட் கமிட்டியிலும், உள்துறை மந்திரி அமித் ஷா சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News