search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    தனியுரிமை விவகாரம் - ஆப்பிளை சீண்டும் சுந்தர் பிச்சை
    X

    தனியுரிமை விவகாரம் - ஆப்பிளை சீண்டும் சுந்தர் பிச்சை

    கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆப்பிள் நிறுவனத்தை சீண்டும் வகையில் தனியுரிமை பற்றி தகவல் தெரிவித்திருக்கிறார். #Google



    தனியுரிமை என்பது விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கக் கூடியவர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடியதாக இருக்கக் கூடாது கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்திருக்கிறார். இது விலை உயர்ந்த சேவைகளை வழங்கும் ஆப்பிள் நிறுவனத்தை சீண்டும் வகையில் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

    அமெரிக்காவில் கிடைக்கும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் எழுதியிருக்கும் அறிக்கையில், பயனர் விவரம் மற்றும் தனியுரிமை விவகாரத்தில் கூகுள் நிறுவனத்தின் நிலைப்பாடு பற்றி விளக்கமளித்து இருக்கிறார். 

    "தனியுரிமை உலகவாசிகள் அனைவருக்கும் பொதுவான ஒன்றாக கிடைக்க வேண்டும். கூகுளின் நிலைப்பாடு தனியுரிமையை அனைவருக்கும் சமமானதாக மாற்றுவது தான். மக்கள் தங்களது தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது, அவை எவ்வாறு பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்பது பற்றி வருத்தம் தெரிவிக்கின்றனர். உலகம் முழுக்க நான் சந்திப்பவர்கள் இதுபற்றி என்னிடம் கேட்கின்றனர்.



    "தனியுரிமை தனித்துவமானது. இதனால் நிறுவனங்கள் மக்களுக்கு அவர்களின் தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றி தனிப்பட்ட விருப்பங்களை வழங்க வேண்டும். கூகுள் நிறுவனத்தை பொருத்தவரை அனைவருக்குமான சேவைகளை உருவாக்குவதே எங்களின் முக்கிய குறிக்கோள் ஆகும்.

    இதன் காரணமாகவே கூகுள் பதில்கள் உலகம் முழுக்க சமமாக ஒரே மாதிரி வழங்கப்படுகிறது. கூகுள் தேடல்களில் அனைவரும் சமமாக பயன்படுத்தக் கூடியதாக இருக்கிறது." இவ்வாறு சுந்தர் தெரிவித்திருக்கிறார்.

    முன்னதாக கூகுள் நிறுவனம் தனது IO2019 டெவலப்பர்கள் நிகழ்வில் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு சார்ந்த பல்வேறு சேவைகள் மற்றும் புதிய அம்சங்களை அறிமுகம் செய்தது.
    Next Story
    ×