search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    போர்ஷ் வடிவமைப்பு கொண்ட மேட் 20 ஆர்.எஸ். ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் ஹூவாய்
    X

    போர்ஷ் வடிவமைப்பு கொண்ட மேட் 20 ஆர்.எஸ். ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் ஹூவாய்

    ஹூவாய் நிறுவனம் இந்தியாவில் போர்ஷ் வடிவமைப்பு கொண்ட மேட் 20 ஆர்.எஸ். ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. #HuaweiMate20Series #Smartphones




    ஹூவாய் நிறுவனம் போர்ஷ் வடிவமைப்பு கொண்ட ஹூவாய் மேட் 20 ஆர்.எஸ். ஸ்மார்ட்போனினை இந்தியாவில் நவம்பர் 27ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இதே தினத்திள் ஹூவாய் நிறுவனம் தனது மேட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களையும் அறிமுகம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.

    புதிய போர்ஷ் வடிவமைப்பு கொண்ட ஹூவாய் மேட் 20 ஆர்.எஸ். மாடல் பிரத்யேக ஆடம்பர வடிவமைப்புடன் இந்தியாவில் வெளியாக இருக்கும் முதல் ஹூவாய் ஸ்மார்ட்போன் ஆகும்.



    போர்ஷ் வடிவமைப்பு மற்றும் ஹூவாய் இணைந்து முற்றிலும் அழகிய ஸ்மார்ட்போனினை கச்சிதமாக வடிவமைத்துள்ளன. அதிகளவு உறுதியுடன், அதேசமயத்தில் அழகாக காட்சியளிக்கும் படி புதிய ஸ்மார்ட்போன் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

    போர்ஷ் பிரான்டிங்கிற்கு ஏற்ற ஆடம்பரம், ஹூவாயின் நேர்த்தியான வடிவமைப்பு இணைந்து ஸ்மார்ட்போனின் தரத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.

    ஆடம்பர மொபைல் அம்சங்களுடன், ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், தலைசிறந்த கேமரா, ஒட்டுமொத்த செயல்திறன் உள்ளிட்டவை புதிய மேட் 20 ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க அம்சங்களாக இருக்கும். 



    போர்ஷ் வடிவமைப்பு கொண்ட மேட் 20 ஆர்.எஸ். ஸ்மார்ட்போன் ஹூவாய் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் கடந்த மாதம் லண்டனில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஹூவாயின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் மாடலாக மேட் 20 சீரிஸ் இருக்கிறது.

    ஹூவாய் மேட் 20 சீரிஸ் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி மெமரி வேரியன்ட் விலை 1,695 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.1,44,000) என்றும் மேட் 20 ஆர்.எஸ். 8 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி வேரியன்ட் விலை 2,095 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.1,78,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் இந்திய விலை இன்னும் சில தினங்களில் தெரியவரும்.
    Next Story
    ×