search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    வாட்ஸ்அப் இந்தியா தலைவராக அபிஜித் போஸ் நியமனம்
    X

    வாட்ஸ்அப் இந்தியா தலைவராக அபிஜித் போஸ் நியமனம்

    ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் இந்தியாவுக்கான தலைவராக அபிஜித் போஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். #WhatsApp



    ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் இந்தியா தலைவராக அபிஜித் போஸ் நியமனம் செய்யப்பட்டார். வாட்ஸ்அப் செயலி பயனர்கள் எண்ணிக்கை உலகில் மற்ற நாடுகளை விட அதிக பயனர்களை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது.

    முன்னதாக அபிஜித் போஸ் மொபைல் பேமென்ட் நிறுவனமான இசிடேப் இணை நிறுவனர் மற்றும் தலைமை அதிகாரியாக பணியாற்றி வந்தார். இத்துடன் வாட்ஸ்அப் இந்தியாவின் முதல் தலைவராக அபிஜித் போஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வாட்ஸ்அப் இந்தியா தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அபிஜித் போஸ் 2019ம் ஆண்டின் துவக்கத்தில் பதவியேற்க இருக்கிறார். கலிபோர்னியாவை தொடர்ந்து முதல் முறையாக வாட்ஸ்அப் நிறுவனத்தின் நாடு முழுக்க பணியாற்றும் குழுவினை அபிஜித் உருவாக்க இருக்கிறார். இதற்கான தலைமையகம் குர்கிராமில் அமைகிறது.



    அபிஜித் போஸ் மற்றும் அவரது குழுவினர் இணைந்து வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியை மேம்படுத்தி, சிறு மற்றும் பெரும் வியாபார மையங்கள் தங்களது வாடிக்கையாளர்களுடன் இணைந்திருக்கச் செய்வதில் பணியாற்றுவர் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்சமயம் வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியை சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

    “இந்தியாவின் அதிவேக டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிக்க பொதுமக்கள் இணைந்திருந்து ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் புதிய சேவைகளை வழங்குவதில் வாட்ஸ்அப் குறிக்கோளாக கொண்டுள்ளது. வெற்றிபெற்ற தொழிலதிபரான அபிஜித் இந்தியா முழுக்க வியாபாரங்களை மேற்கொள்ளும் நுணுக்கங்கள் அறிந்து வைத்திருக்கிறார்,” என வாட்ஸ்அப் தலைமை நிர்வாக அதிகாரியான மேட் இடிமா தெரிவித்தார்.
    Next Story
    ×