search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இணையத்தில் லீக் ஆன ஸ்னாப்டிராகன் 670 பிராசஸர் கொண்ட பிக்சல் ஸ்மார்ட்போன்
    X

    இணையத்தில் லீக் ஆன ஸ்னாப்டிராகன் 670 பிராசஸர் கொண்ட பிக்சல் ஸ்மார்ட்போன்

    கூகுள் நிறுவனத்தின் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வந்த நிலையில், ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் லீக் ஆகியுள்ளது. #Pixel3Lite



    கூகுள் நிறுவனத்தின் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் விவரங்கள் அவ்வப்போது வெளியாகி வந்த நிலையில், இம்முறை ஸ்மார்ட்போனின் புகைப்படம் லீக் ஆகியுள்ளது. முன்னதாக ஏ.ஆர். கோர் ஏ.பி.கே. டியர்டவுன் மூலம் வெளியாகி இருந்த நிலையில் புதிய பிக்சல் 3 லைட் ஸ்மார்ட்போன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

    தற்சமயம் வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் பிக்சல் 3 லைட் மாடலில் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, நாட்ச் வழங்கப்படவில்லை. வடிவமைப்பைப் பொருத்த வரை பாலிகார்போனேட் ஷெல் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதைதை பார்க்க முந்தைய நோக்கியா லூமியா மற்றும் ஐபோன் 5சி போன்களை நினைவூட்டுகிறது.


    புகைப்படம் நன்றி: ROZETKED

    பிக்சல் 3 லைட் சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.56 இன்ச் ஐ.எஸ்.பி. டிஸ்ப்ளே, ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 2220x1080 பிக்சல் ரெசல்யூஷன், ஸ்னாப்டிராகன் 670 பிராசஸர், 4 ஜி.பி. ரேம் மற்றும் 32 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. இதனுடன் யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், ஸ்பீக்கர் கிரில் கொண்டிருக்கிறது. 

    புகைப்படங்களை எடுக்க பிக்சல் 3 லைட் ஸ்மார்ட்போனின் பின்புறம் ஒற்றை கேமரா சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ், வட்ட வடிவம் கொண்ட கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. செல்ஃபி எடுக்க 8 எம்.பி. கேமரா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இத்துடன் 2915 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. கூகுள் போன் என்பதால், பிக்சல் 3 லைட் மாடலில் ஆன்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இயங்கும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×