search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    டிக்டொக் போன்ற புதிய செயலி உருவாக்கும் ஃபேஸ்புக்
    X

    டிக்டொக் போன்ற புதிய செயலி உருவாக்கும் ஃபேஸ்புக்

    ஃபேஸ்புக் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய செயலி பயனர்கள் தங்களது லிப் சின்க் செய்யப்பட்ட வீடியோக்களை பகிர்ந்து கொள்ள வழி செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது. #Facebook #Lasso



    ஃபேஸ்புக் நிறுவனம் புதிதாக செயலி ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. லஸ்ஸோ என்ற பெயரில் உருவாகி வரும் புதிய செயலியில் பயனர்கள் பிரபல பாடல் அல்லது வீடியோக்களுக்கு லிப்-சின்க் செய்யும் வீடியோக்களை படமாக்கி, அவற்றை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    ஃபேஸ்புக்கின் புதிய லஸ்ஸோ செயலி டிக்டொக் (மியூசிக்கலி) செயலிக்கு போட்டியாக இருக்கும் படி உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. டிக்டொக் செயலி இளைஞர்களுக்கு என உருவாக்கப்பட்டுள்ள நிலையில், முற்றிலும் பொழுதுபோக்கு மற்றும் நகைச்சுவை செய்யும் வகையில் இருக்கிறது.

    அந்த வகையில் ஃபேஸ்புக் சார்பில் உருவாகி வரும் புதிய செயலியை ஃபேஸ்புக்கின் வீடியோ மற்றும் வாட்ச் குழுவினரால் உருவாக்கப்படுவதாகவும், இதற்கு தலைமை மூத்த வடிவமைப்பாளர் பிராடி வொஸ் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. வொஸ் முன்னதாக ஃபேஸ்புக்கின் டி.வி. செயலியில் பணியாற்றி வந்தார்.



    ஃபேஸ்புக் நிறுவனம் இளைஞர்களுக்கான புதிய செயலியில் 2016ம் ஆண்டில் இருந்து ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக இதே வருடத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் பல்வேறு இசை நிறுவனங்களிடம் உரிமையை கைப்பற்றும் பணிகளில் ஈடுபடத் துவங்கியது.

    சமீபத்தில் இன்ஸ்டாகிராம் செயலியில் மியூசிக் ஸ்டிக்கர்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பயனர்கள் இன்ஸ்டா ஸ்டோரிக்களில் இசையை சேர்க்க முடியும், பின் இந்த அம்சம் ஃபேஸ்புக்கிலும் சேர்க்கப்பட்டது. ஃபேஸ்புக் நிறுவனம் லிப் சின்க் அம்சத்தை நேரலை செய்யும் வசதியை சோதனை செய்ய துவங்கியிருக்கிறது. 

    மேலும் ஃபேஸ்புக் பயனர்கள் தங்களுக்கு விரும்பிய பாடல்களை பின் செய்யும் வசதி விரைவில் வழங்கப்படும் என்றும் இதனை நண்பர்கள் கேட்க முடியும் என கூறப்படுகிறது. இந்த அம்சம் மைஸ்பேஸ் மியூசிக் போன்று இருக்கிறது.
    Next Story
    ×