search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சாம்சங் புதிய ஸ்மார்ட்போனினை சியோமி தயாரிக்க இருப்பதாக தகவல்
    X

    சாம்சங் புதிய ஸ்மார்ட்போனினை சியோமி தயாரிக்க இருப்பதாக தகவல்

    தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் தனது புதிய ஸ்மார்ட்போன் மாடலை உற்பத்தி செய்யும் பணியை சியோமியிடம் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Samsung #Xiaomi



    தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் சியோமி ஸ்மார்ட்போன் மாடல்களை வடிவமைத்து வழங்கும் வின்டெக் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    மேலும் வின்டெக் உற்பத்தி செய்யும் முதல் சாம்சங் ஸ்மார்ட்போனாக கேலக்ஸி ஏ6எஸ் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. வின்டெக் உற்பத்தி செய்யும் ஸ்மார்ட்போன்கள் சீன சந்தையில் விற்பனை செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    சாம்சங் கேலக்ஸி ஏ6எஸ் ஸ்மார்ட்போன் சமீபத்தில் இணையத்தில் லீக் ஆகிவருகிறது. இதேபோன்று ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விவரங்கள் வெளியானது. இதேபோன்று கேலக்ஸி P30 ஸ்மார்ட்போனின் விவரங்களும் இணையத்தில் லீக் ஆனது, பின் இந்த ஸ்மார்ட்போன் தான் கேலக்ஸி ஏ6எஸ் என கூறப்பட்டது.



    புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் மெல்லிய பெசல்கள் மற்றும் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இது குறித்து சாம்சங் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. மேலும் வின்டெக் உற்பத்தி செய்யும் மாடல் அதன் லோகோவுடன் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.

    புதிய திட்டத்தின் மூவம் சாம்சங் நிறுவனம் உற்பத்தி கட்டணத்தை வெகுவாக குறைக்க முடியும் என கூறப்படுகிறது. பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படும் நிலையில், இருநிறுவனங்களிடையேயான ஒப்பந்தம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.




    சமீபத்தில் சாம்சங் நிறுவனம் மூன்று கேமரா செட்டப் கொண்ட தனது முதல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 24 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. டெப்த் லென்ஸ், 8 எம்.பி. அல்ட்ரா-வைடு லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மனிதர்கள் கண்களை கொண்டு பார்க்கும் காட்சியை அப்படியே படம்பிடிக்க முடியும்.

    முன்பக்கம் 12 எம்.பி. கேமரா சென்சார் மற்றும் பிக்சல் பின்னிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு குறைவான வெளிச்சம் இருக்கும் பகுதிகளிலும் சிறப்பான புகைப்படங்களை எடுக்க முடியும். இத்துடன் ஏ.ஆர். எமோஜி அம்சமும் வழங்கப்பட்டு இருக்கிறது.
    Next Story
    ×