search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஸ்பேம் அழைப்புகளை தவிர்க்கச் செய்யும் கூகுள் ஆப்

    மொபைல் போன் பயன்படுத்துவோரை அதிகம் பாதிக்கும் ஸ்பேம் அழைப்புகளை தவிர்க்கச் செய்யும் கூகுள் ஆப் அம்சம் அறிமுகமாகியுள்ளது. #Google #phone



    மொபைல் போன் பயன்படுத்துவோரை கடந்த சில ஆண்டுகளாக அதிகம் பாதிக்கும் விஷயமாக தேவையற்ற மற்றும் விளம்பர அழைப்புகள் (ஸ்பேம்) இருக்கின்றன. இவற்றை தவிர்க்க பல்வேறு மூன்றாம் தரப்பு செயலிகள் கிடைக்கும் நிலையில், இவை அத்தகைய சிறப்பானதாக இல்லை என்ற குற்றச்சாட்டை பெரும்பாலானோர் தெரிவிக்கின்றனர்.

    ஸ்பேம் அழைப்புகளை தவிர்க்க செய்ய கூகுள் புதிய அம்சத்தை வழங்குகிறது. முன்னதாக ஏப்ரல் மாதத்தில் கூகுள் போன் ஆப் பீட்டா பதிப்பில் ஸ்பேம் அழைப்புகளை கண்டறியும் அம்சம் சோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் போன் ஆப் சப்போர்ட் பக்கத்தில் பயனர்கள் ஸ்பேம் அழைப்புகளை தவிர்க்க செய்யும் மாற்றங்களை அப்டேட் செய்திருக்கிறது.

    காலர் ஐடி மற்றும் ஸ்பேம் ப்ரோடெக்ஷன் என அழைக்கப்படும் இந்த அம்சம் தானாகவே ஸ்பேம் அழைப்புகளை கட்டுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. போன் ஆப் தானாகவே ஸ்பேம் அழைப்புகளை வாய்ஸ்மெயிலுக்கு அனுப்பிவிடும்.



    “கூகுள் போன் செயலியில் காலர் ஐடி மற்றும் ஸ்பேம் ப்ரோடெக்ஷன் ஆன் செய்யப்பட்டு இருந்தால், உங்களுக்கு அழைப்பு விடுப்பவர்களின் விவரங்களை பார்க்க முடியும். இதில் அழைப்புகளை மேற்கொள்வோர் உங்களது கான்டாக்ட் இல் இல்லாத வியாபார மையங்கள் மற்றும் ஸ்பேம் அழைப்புகள் குறித்து எச்சரிக்கை செய்யும்” என கூகுள் சப்போர்ட் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த அம்சத்தை ஆனஅ செய்ய செட்டிங்ஸ் சென்று Caller ID & spam ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும். ஒருவேளை ஸ்பேம் அழைப்புகளால் உங்களது போன் ரிங் ஆக வேண்டம் எனில் Filter suspected spam calls ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த அம்சத்தை தேர்வு செய்வது ஒவ்வொருத்தரின் தனிப்பட்ட விருப்பம் ஆகும்.

    மொபைலுக்கு வரும் ஸ்பேம் அழைப்புகளை தற்சமயம் போன் ஆப் சிவப்பு நிற ஸ்கிரீன் மூலம் எச்சரிக்கை செய்கிறது. புதிய அம்சம் எந்தளவு சிறப்பானதாக இருக்கும் என்றும் இது எவ்வாறு இயங்கும் என்பது குறித்த விவரங்கள் அறியப்படவில்லை. #Google #phone #Apps
    Next Story
    ×