search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    விரைவில் இந்தியா வரும் மோட்டோ இ5 பிளஸ்
    X

    விரைவில் இந்தியா வரும் மோட்டோ இ5 பிளஸ்

    மோட்டோரோலா இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மோட்டோ இ5 பிளஸ் வெளியீடு குறித்த டீசர் பதிவிடப்பட்டு இருக்கிறது.




    மோட்டோ இ5 டீசர்களை தொடர்ந்து மோட்டோரோலா இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மோட்டோ இ5 பிளஸ் டீசர் பதிவிடப்பட்டுள்ளது. முன்னதாக பேட்டரி சார்ந்த பிரச்சனைகள் குறித்த வீடியோவை அந்நிறுவன ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருந்தது.

    தற்சமயம் மோட்டோ இ5 பிளஸ் வெளியீடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதே நிகழ்வில் மோட்டோ இ5 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மோட்டோ இ5 ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் ரூ.11,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மூன்றாம் தரப்பு விற்பனையாளர் நிர்ணயித்திருக்கும் விலை என்பதால் இது அதிகாரப்பூர்வ விலை கிடையாது

    முன்னதாக ஏப்ரல் மாத வாக்கில் மோட்டோ இ5 பிளே ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது, எனினும் இந்த மாடல் இந்தியாவில் வெளியிடப்படாது என தெரிவிக்கப்பட்டது. அறிமுக நிகழ்வில் இந்த ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் மட்டும் வெளியிடப்படும் என்றும் மோட்டோ இ5 மற்றும் மோட்டோ இ5 பிளஸ் மாடல்கள் ஆசிய பசிபிக், ஐரோப்பா, லத்தின் அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.



    மோட்டோ இ5 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் ஹெச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி, 1440x720 பிக்சல் டிஸ்ப்ளே
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 பிராசஸர்
    - 3 ஜிபி ரேம்
    - 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 12 எம்பி பிரைமரி கேமரா, f/2.0, எல்இடி ஃபிளாஷ், PDAF
    - 8 எம்பி பிரைமரி கேமரா, செல்ஃபி ஃபிளாஷ்
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - டர்போ பவர் சார்ஜிங் வசதி

    ஐரோப்பாவில் மோட்டோ இ5 பிளஸ் விலை EUR 149 (இந்திய மதிப்பில் ரூ.13,495) என நிர்ணயம் செய்யப்பட்டது.
    Next Story
    ×