search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஐபோனில் சேர்க்கப்படும் புதிய அம்சம்

    ஆப்பிள் நிறுவனம் பதிவு செய்திருக்கும் புதிய காப்புரிமையில் அந்நிறுவனம் ஐபோனில் சேர்க்க இருக்கும் அம்சம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

     



    ஆப்பிள் நிறுவனம் பதிவு செய்திருக்கும் புதிய காப்புரிமையில் கையெழுத்துக்களை புரிந்து கொள்ளும் புதிய வசதியை ஐபோன்களில் சேர்க்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது.

    பிப்ரவரி 2014-இல் அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகத்தில் ஆப்பிள் பதிவு செய்திருக்கும் காப்புரிமையில் மேனேஜிங் ரியல்-டைம் ஹேன்ட்ரைட்டிங் ரெகஃனீஷன் (Managing Real-Time Handwriting Recognition) என்ற தலைப்பில் பதிவிடப்பட்டிருக்கிறது.

    இந்த அம்சம் பயனரின் சாதனத்தில் கையெழுத்து வசதியை வழங்குகிறது. இந்த அம்சம் சைனீஸ் உள்பட பல்வேறு மொழிகளை சப்போர்ட் செய்யும் என கூறப்படுகிறது. இத்துடன் இந்த அம்சம் ஆப்பிள் சாதனங்களில் வேலை செய்யுமா அல்லது இதர திட்டங்களை ஆப்பிள் வகுத்திருக்கிறதா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. 

    ஐபோனில் மட்டும் வழங்கப்படுமா அல்லது இதர ஆப்பிள் சாதனங்களிலும் வழங்கப்படுமா என்பதும் மர்மமாகவே இருக்கிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஆப்பிள் விழாவில் ஏர்பவர் எனும் வயர்லெஸ் சாதனம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இத்துடன் மூன்று புதிய ஐபோன்களும் இந்த ஆண்டு அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது. ஆப்பிள் ஏர்பவர் சாதனம் ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனங்களுக்கு சார்ஜ் செய்யும் திறன் கொண்டுள்ளது. ஆப்பிளின் புதிய ஏர்பவர் சாதனம் கியூ.ஐ. வயர்லெஸ் பேட் சாதனத்துக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்படுகிறது.
    Next Story
    ×