search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த ரியல்மி 1 - அடுத்த விற்பனை மற்றும் முழு விவரங்கள்
    X

    நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த ரியல்மி 1 - அடுத்த விற்பனை மற்றும் முழு விவரங்கள்

    ஒப்போவின் சப்-பிரான்டு ரியல்மி 1 ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கிய சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த நிலையில், இதன் அடுத்த விற்பனை தேதி மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஒப்போ நிறுவனத்தின் சப்-பிரான்டு ரியல்மி 1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு வந்த இரண்டே நிமிடங்களில் முழுமையாக விற்றுத் தீர்ந்துள்ளது.

    இந்தியாவில் 3 ஜிபி ரேம் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி என இரண்டு மாடல்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இரண்டுமே நிமிடங்களில் விற்றுத்தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இதுதவிர அமேசான் இந்தியா வலைத்தளத்தில் அதிகம் விற்பனையான சாதனங்களில் ஒன்றாக ரியல்மி 1 அறிவிக்கப்பட்டுள்ளது.



    முதல் விற்பனை இரண்டே நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த நிலையில் அடுத்த விற்பனை ஜூன் 1-ம் தேதி நடைபெறும் என ரியல்மி நிறுவன தலைமை செயல் அதிகாரி மாதேவ் ஷெத் தெரிவித்திருக்கிறார். இத்துடன் முதல் விற்பனைக்கு கிடைத்த வரவேற்புக்கு இந்திய வாடிக்கைாயளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் ஃபிளாஷ் விற்பனைக்கு நாங்கள் திட்டமிடவில்லை, எனினும் இந்திய வாடிக்கையாளர்கள் அளித்திருக்கும் வரவேற்பு நாங்கள் எதிர்பாராத ஒன்று. வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக தயாரிப்பு பணிகளை அதிகரித்து இருக்கிறோம் என அவர் மேலும் தெரிவிவித்துள்ளார்.



    ரியல்மி 1 சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P60 12nm பிராசஸர்
    - மாலி-G72 MP3 GPU
    - 3 ஜிபி / 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - கலர் ஓஎஸ் 5.0 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3410 எம்ஏஹெச் பேட்டரி

    ரியல்மி 1 ஸ்மார்ட்போன் மூன்லைட் சில்வர் மற்றும் டையமன்ட் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 3 ஜிபி ரேம் மாடல் ரூ.8,990 மற்றும் 6 ஜிபி ரேம் மாடல் ரூ.13,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    Next Story
    ×