search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஆஃப்லைனில் விற்பனைக்கு வரும் ஒன்பிளஸ் 6
    X

    ஆஃப்லைனில் விற்பனைக்கு வரும் ஒன்பிளஸ் 6

    ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் விற்பனை அமேசான் இந்தியா, ஒன்பிளஸ் ஸ்டோர் மற்றும் ஒன்பிளஸ் பாப்-அப் ஸ்டோர்களை தொடர்ந்து க்ரோமா விற்பனை மையங்களிலும் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இதன் விற்பனை இன்னும் சில தினங்களில் துவங்க இருக்கிறது. அமேசான் இந்தியா, ஒன்பிளஸ் ஸ்டோர் வலைத்தளங்களிலும், ஒன்பிளஸ் பாப்-அப் ஸ்டோர்களை தொடர்ந்து ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் க்ரோமா ஸ்டோர்களிலும் விற்பனை செய்யப்பட்ட இருக்கிறது.

    நாடு முழுக்க சுமார் 112 க்ரோமா விற்பனை மையங்களில் மே 22-ம் தேதி முதல் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே எஸ்பிஐ வழங்கும் ரூ.2000 கேஷ்பேக் சலுகையுடன் சேர்த்து தேர்வு செய்யப்பட்ட இதர வங்கிகள் மற்றும் பேடிஎம் சார்பில் தினமும் குறிப்பிட்ட தொகை கேஷ்பேக் வடிவில் வழங்கப்பட இருக்கிறது. இந்த சலுகை விற்பனை துவங்கும் முதல் வாரத்திற்கு மட்டுமே வழங்கப்படும்.

    இதுதவிர இந்தியா முழுக்க எட்டு நகரங்களின் பாப்-அப் ஸ்டோர்களில் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்பட இருக்கிறது. மே 21-ம் தேதி மாலை 3.30 மணி முதல் இரவு 8.00 மணி வரைக்கும், மே 22-ம் தேதி காலை 11.00 மணி முதல் இரவு 7 மணி வரை பாப்-அப் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.



    ஒன்பிளஸ் 6 சிறப்பம்சங்கள்:

    - 6.28 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 ரக AMOLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - 2.8 ஜிகாஹர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
    - அட்ரினோ 630 GPU
    - 6 ஜிபி / 8 ஜிபி ரேம் 
    - 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியா) மற்றும் ஆக்சிஜன் ஓஎஸ் 5.1
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி + 20 எம்பி பிரைமரி கேமரா
    - 16 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட்
    - 3300 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் டேஷ் சார்ஜ்

    இந்தியாவில் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.34,999 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் கொண்ட மாடலின் விலை ரூ.39,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    இத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 6 மார்வெல் அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டது, இதன் விலை ரூ.44,999 என நி்ர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஜூன் 5-ம் தேதி துவங்க இருக்கிறது.
    Next Story
    ×