search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஏர்டெல் மீது தக்க நடவடிக்கை எடுக்கக் கோரும் ரிலையன்ஸ் ஜியோ
    X

    ஏர்டெல் மீது தக்க நடவடிக்கை எடுக்கக் கோரும் ரிலையன்ஸ் ஜியோ

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையத்தில் பாரதி ஏர்டெல் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியுள்ளது. #Airtel #RelianceJio
    மும்பை:

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையத்தில் பாரதி ஏர்டெல் மீது குற்றஞ்சாட்டியுள்ளது. ஏர்டெல் நிறுவனம் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 சாதனங்களுக்கு வழங்கும் சில சேவைகளில் விதிமுறை மீறல்களில் ஈடுபடுவதாகவும், இந்த விவகாரத்தில் ஏர்டெல் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ரிலையன்ஸ் ஜியோ கேட்டு கொண்டுள்ளது.

    “ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 சேவை ஏர்டெல் சார்பில் வழங்கப்பட்டு வருவதில் ஒருங்கிணைந்த உரிமத்தின் விதிகளை மீறும் வகையில் உள்ளது,” என ரிலையன்ஸ் ஜியோ சார்பில் அனுப்பப்பட்டு இருக்கும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது குறித்து ஏர்டெல் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

    ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனங்கள் இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 சாதனத்தை மே 11-ம் தேதி முதல் விற்பனை செய்து வருகின்றன. ஆப்பிள் வாட்ச் மற்றும் ஐபோன் பயன்படுத்துவோர் ஒரே சிம் கார்டு கொண்டு ஐபோன் மற்றும் வாட்ச் சாதனங்களில் பயன்படுத்த முடியும். ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 சாதனத்தில் இ-சிம் வசதி வழங்கப்பட்டுள்ளது.


    இ-சிம் கார்டு, ஐபோனில் உள்ள சிம் கார்டுடன் பிரத்யேக நெட்வொர்க் நோட் மூலம் இணைந்து கொள்ளும். இந்த நோட் இ-சிம் கார்டில் உள்ள ப்ரோஃபைல் அலோகேஷனில் ஆப்பரேட்டர், சிம் தகவல்கள், பின், ரிமோட் ஃபைல் மேனேஜ்மென்ட் போன்ற தகவல்களை கொண்டிருக்கிறது.

    ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்திருக்கும் புகாரில் ஏர்டெல் சார்பில் இந்தியாவில் இசிம்-களுக்கான ப்ரோவிஷனிங் நோட்களை செட்டப் செய்யவில்லை என குறிப்பிட்டிருக்கிறது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 சாதனங்களில் வழங்கும் நோட்கள் இந்தியாவுக்கு வெளியே அமைந்திருக்கிறது, என்றும் விதிமுறைகளை மீறும் செயல் என ஜியோ தெரிவித்திருக்கிறது.

    மேலும் “ஏர்டெல் நிறுவனம் மேண்டுமென்றே இந்திய எல்லைக்கு வெளியே நெட்வொர்க்களை கட்டமைத்திருக்கிறது, இந்த விவகாரத்தில் உடனடியாக ஏர்டெல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறோம். இதுமட்டுமின்றி ஏர்டெல் உடனடியாக இந்த சேவையை நிறுத்த உத்தரவிட வேண்டுமென,” ஜியோ தெரிவித்துள்ளது.  #Airtel #RelianceJio
    Next Story
    ×