search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கருப்பு வெள்ளை நிறங்களில் ஒன்பிளஸ் 6
    X

    கருப்பு வெள்ளை நிறங்களில் ஒன்பிளஸ் 6

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில் புதிய தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஒன்பிளஸ் அறிமுக நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோருக்கான நுழைவு சீட்டுகள் இன்று (மே 8) காலை 10.00 மணி முதல் ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் (oneplus.in) கிடைக்கும். 

    இதற்கான அறிவிப்பை அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் மூலம் அறிவித்திருந்தார். 



    அமிதாப் பச்சன் ட்வீட்டில் ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரி பீட் லௌவுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன்களும் இடம்பெற்றிருக்கின்றன. இதில் ஒன்பிளஸ் 6 கருப்பு மற்றும் வெள்ளை என இரண்டு நிறங்களை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

    இந்த புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி இருந்த கேஸ் ரென்டர் மற்றும் லைவ் புகைப்படங்களை போன்றே காட்சியளிக்கிறது. மேலும் இதன் வெள்ளை நிற மாடல் மென்மையான மேட் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்ற அம்சம் ஒன்பிளஸ் 5T சான்ட்ஸ்டோன் வைட் நிறத்திலும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



    அமிதாப் ட்வீட் உடனடியாக நீக்கப்பட்டு மற்றொரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இதில் அமிதாப் பச்சன், ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரி என இருவரும் ஸ்மார்ட்போன் இல்லாமல் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவு செய்திருந்தார். 

    இதைத் தொடர்ந்து ஒன்பிளஸ் பதிவிட்டிருக்கும் புதிய டீசரில் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் சூப்பர் ஸ்லோ மோ அம்சம் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது.



    ஒன்பிளஸ் 6 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 6.28 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 AMOLED டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
    - அட்ரினோ 630 GPU
    - 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் ஆக்சிஜன் ஓஎஸ் 5.1
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.7, 1/2.6″  சோனி IMX519 சென்சார், 1.22μm பிக்சல்
    - 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.7
    - 16 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி
    - 3300 எம்ஏஹெச் பேட்டரி, டேஷ் சார்ஜ்

    புதிய ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ சிறப்பம்சங்கள் மே 16-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் தெரியவரும்.
    Next Story
    ×