search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இந்தியாவில் ரூ.2500 விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்
    X

    இந்தியாவில் ரூ.2500 விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி சி7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    சாம்சங் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்த கேலக்ஸி சி7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலையை குறைத்துள்ளது.

    இந்தியாவில் ரூ.27,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி சி7 ப்ரோ தற்சமயம் ரூ.22,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இதன் விலை ரூ.3090 வரை குறைக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டாவது முறையாக கேலக்ஸி சி7 ப்ரோ விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது.

    புதிய விலை அமேசான் இந்தியா வலைத்தளத்தில் மாற்றப்பட்டுவிட்டது. எனினும் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கேலக்ஸி சி7 ப்ரோ விலை ரூ.24,900 என்றே இருக்கிறது. பேடிஎம் மால் வலைத்தளத்தில் ஸ்மார்ட்போனினை வாங்குவோருக்கு ரூ.2500 வரை கேஷ்பேக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கேலக்ஸி சி7 ப்ரோ ரூ.22,400க்கு பெற முடியும்.



    சாம்சங் கேலக்ஸி சி7 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 5.7 இன்ச் ஃபுல் ஹெச்டி 1080x1920 பிக்சல் சூப்பர் AMOLED 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 4
    - 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 626 சிப்செட்
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மல்லோ
    - 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல்டோன் எல்இடி ஃபிளாஷ், f/1.9
    - 16 எம்பி செல்ஃபி கேமரா, f/1.9
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3300 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

    முழுமையான மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்ட கேலக்ஸி சி7 ப்ரோ ஸ்மார்ட்போனின் ஹோம் பட்டனில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஸ்மார்ட்போன் 100 நிமிடங்களில் 100% சார்ஜ் ஆகிவிடும்.
    Next Story
    ×