search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்: ஐபோன் எஸ்இ
    X
    கோப்பு படம்: ஐபோன் எஸ்இ

    மிக விரைவில் புதிய ஐபோன் வெளியிடும் ஆப்பிள்?

    ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் அந்நிறுவனம் புதிய ஐபோனினை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    கலிபோர்னியா:

    ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு மட்டும் மூன்று ஐபோன்களை வெளியிட இருக்கிறது, இதில் ஒன்று ஐபோன் X மேம்படுத்தப்பட்ட மாடல் என கூறப்படுகிறது.

    மூன்று ஐபோன்களும் பெரிய மாடல்கள் என்ற வாக்கில் குறைந்த விலையில் மற்றொரு ஐபோன் மாடலை ஆப்பிள் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய விலை குறைந்த ஐபோன் மாடல் ஐபோன் எஸ்இ ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடல் என்றும் கூறப்படுகிறது.

    ஐபோன் எஸ்இ2 என அழைக்கப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில், புதிய விலை குறைந்த ஐபோனின் தெளிவான தகவல்கள் வெளியாகாமல் உள்ளது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் விலை குறைந்த ஐபோன் மாடல் 2018 ஆப்பிள் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    2018 ஆப்பிள் சர்வதேச டெவலப்பர்கள் மாநாடு இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த மாநாடு ஜூன் 4-ம் தேதி துவங்கி ஜூன் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் ஐபோன் எஸ்இ2 அறிமுகம் செய்யப்படலாம்.


    கோப்பு படம்: ஐபோன் எஸ்இ

    புதிய ஐபோன் வெளியீட்டுக்கு முன் யூரேஷியன் எகனாமிக் கமிஷனில் (ECC) ஆப்பிள் பதிவு செய்திருக்கும் சில ஐபோன் மாடல்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. ECC பட்டியலின் படி மொத்தம் 11 ஐபோன் மாடல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவை முறையே A1920, A1921, A1984, A2097, A2098, A2099, A2101, A2103, A2014, A2015 மற்றும் A2016 என பெயரிடப்பட்டுள்ளன.

    இந்த 11 ஐபோன் மாடல்களில் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இத்துடன் இந்த பெயர்கள் அனைத்தும் மற்ற சாத்னங்களுக்கு என இதுவரை பயன்படுத்தப்படவில்லை என ஆப்பிள் இன்சைடர் தெரிவித்துள்ளது. ECC பட்டியலில் ஐபோனின் பெயர்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும் இவை ஐபேட்களின் பெயர் கிடையாது என்பது மட்டும் உறுதியாகியுள்ளது. சமீபத்தில் ஆப்பிள் தனது புதிய ஐபேட் மாடலை அறிமுகம் செய்திருந்தது.

    ஆப்பிள் உயர் ரக ஐபோன் மாடல்கள் ஆண்டின் இரண்டாவது பாதியில் அறிமுகம் செய்யப்படும் நிலையில், இந்த ஆண்டும் இதே வழிமுறையை பின்பற்றலாம். அந்த வகையில் புதிய ஐபோன் எஸ்இ 2 விரைவில் அறிமுகமாக அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. எனினும் இது குறித்து ஆப்பிள் சார்பில் எவ்வித கருத்தும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.


    கோப்பு படம்: ஐபோன் எஸ்இ

    சிறப்பம்சங்களை பொருத்த வரை ஐபோன் எஸ்இ2 ஸ்மார்ட்போனில் 4.0 இன்ச் ஸ்கிரீன், மேம்படுத்தப்பட்ட ஆப்பிள் A10 ஃபியூஷன் சிப்செட் வழங்கப்படலாம் என்றும் கிளாஸ் பேனல், வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ வெளியிட்ட தகவல்களில் புதிய ஐபோன் எஸ்இ மாடலின் அளவுகளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படாது என்றும், ஃபேஸ் ஐடி வழங்கப்படாமல், டச் ஐடி மற்றும் ஒற்றை பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    சீன சமூக வலைத்தளமான வெய்போவில் ஐபோன் எஸ்இ 2 வீடியோ வடிவில் வெளியாகி இருந்தது. இதில் ஐபோன் X போன்றே புதிய ஐபோன் எஸ்இ ஸ்மார்ட்போனும் நாட்ச் வகை டிஸ்ப்ளே கொண்டிருந்தது. ஐஓஎஸ் போன்ற யூசர் இன்டர்ஃபேஸ், டூயல் பிரைமரி கேமரா செட்டப், எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளே உள்ளிட்டவை வழங்கப்பட்டிருந்தது.
    Next Story
    ×