search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    தமிழகம் முழுக்க 100 மோட்டோ ஹப்களை துவங்க மோட்டோரோலா திட்டம்
    X

    தமிழகம் முழுக்க 100 மோட்டோ ஹப்களை துவங்க மோட்டோரோலா திட்டம்

    இந்தியா முழுக்க மோட்டோரோலா ஆஃப்லைன் விற்பனை மையங்களை அதிகரிக்கும் நோக்கில் மற்ற மாநிலங்களை போன்று தமிழகத்திலும் புதிய மோட்டோ ஹப்களை துவங்க இருப்பதாக மோட்டோரோலா அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் மோட்டோரோலா ஆஃப்லைன் விற்பனை மையங்களின் எண்ணிக்கையை அந்நிறுவனம் அதிகப்படுத்தி வருகிறது. முன்னதாக இதே ஆண்டில் புதுடெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்ளில் புதிய மோட்டோ ஹப்களை துவங்கிய நிலையில் தமிழகத்தில் புதிய மோட்டோ ஹப்களை துவங்க இருக்கிறது.

    தமிழ் நாட்டில் மொத்தம் 100 மோட்டோ ஹப்களை திறக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதில் 50 மோட்டோ ஹப்கள் சென்னையிலும் மற்ற மாவட்டங்களில் 50 ஹப்கள் திறக்கப்படும் என மோட்டோரோலா அறிவித்துள்ளது. புதிய மோட்டோ ஹப்களின் மூலம் தென் மாநில மோட்டோ விற்பனையை அதிகரித்து மோட்டோ சாதனங்களை பெரும்பாலானோருக்கு கொண்டு சேர்க்க முடியும்.

    மோட்டோ ஹப் ஸ்டோரில் மோட்டோரோலா நிறுவனத்தின் அனைத்து சாதனங்களும் விற்பனை செய்யப்படும். இதில் ஆன்லைனில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் மோட்டோ X4 மற்றும் மோட்டோ மாட்களும் அடங்கும். இதுமட்டுமின்றி மோட்டோ இன்-இயர் ஹெட்போன்கள், மோட்டோ ஷெல் மற்றும் கவர்களும் கிடைக்கும்.

    முன்னதாக பூர்விகா மொபைல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தமிழ் நாடு, புதுச்சேரியில் 43 நகரங்களிலும், பிக் சியுடன் இணைந்து கர்நாடகா மாநிலத்திலும், லாட் மொபைல் ஸ்டோருடன் இணைந்து ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா முழுக்க 55 நகரங்களில் மோட்டோ ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய இருப்பதாக மோட்டோரோலா அறிவித்தது.

    ஆஃப்லைன் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் இந்த ஆண்டு இறுதிக்குள் 1000 புதிய மோட்டோ ஹப்களையும், நகரங்களில் 100 மோட்டோ ஹப்களை திறக்க திட்டமிட்டிருப்பதாக மோட்டோரோலா அறிவித்தது.
    Next Story
    ×