search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்: மோட்டோ ஸ்மார்ட்போன்
    X
    கோப்பு படம்: மோட்டோ ஸ்மார்ட்போன்

    வெய்போவில் வெளியான மோட்டோ ஸ்மார்ட்போன் புகைப்படம்

    சீன வலைத்தளமான வெய்போவில் மோட்டோரோலா மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போனின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
    பீஜிங்:

    மோட்டோரோலாவின் மோட்டோ இ5, மோட்டோ இ5 பிளே மற்றும் மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் மோட்டோ இ4 சீரிஸ் வெளியிடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மோட்டோ இ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சற்று முன்னதாக அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மோட்டோ இ5 ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருவதால் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. அந்த வகையில் வெய்போ தளத்தில் மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போனின் தகவல்கள் பதிவிடப்பட்டுள்ளன.

    வெய்போ பதிவில் இடம்பெற்றிருக்கும் மோட்டோ இ5 பிளஸ் புகைப்படத்தில் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு சார்ந்த விவரங்கள் தெரியவந்துள்ளன. ஸ்மார்ட்போனின் முன்பக்கம் மற்றும் பின்புறம் தெளிவாக காட்சியளிக்கும் புகைப்படங்களின் படி புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் 18:9 ரக டிஸ்ப்ளே மற்றும் மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டிருக்கிறது.



    இத்துடன் வளைந்த கிளாஸ் பேக் மற்றும் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது. இதன் கேமராக்கள் பார்க்க மோட்டோ X4 மற்றும் மோட்டோ இ4 பிளஸ் போன்று காட்சியளிக்கிறது. தற்போதைய புகைப்படத்தில் டூயல் பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்திருக்கிறது. 

    முன்னதாக எவான் பிளாஸ் வெளியிட்ட தகவல்களில் புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் ஒற்றை கேமரா அமைப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இம்முறை வெளியாகி இருக்கும் புகைப்படம் மற்றும் ஏற்கனவே வெளியான புகைப்படங்களின் வடிவமைப்பில் எவ்வித மாற்றங்களும் இல்லை.

    மற்ற சிறப்பம்சங்களை பொருத்த வரை மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 430 மற்றும் மீடியாடெக் MT675X சிப்செட் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5.8 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1440 பிக்சல் டிஸ்ப்ளே, 3 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, 16 எம்பி + 8 எம்பி டூயல் கேமரா செட்டப் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    புகைப்படம்: நன்றி வெய்போ
    Next Story
    ×