search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இந்தியாவில் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் ஒன்பிளஸ் முன்னணி
    X

    இந்தியாவில் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் ஒன்பிளஸ் முன்னணி

    இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் பிரீமியம் ஸ்மார்ட்போன்களின் விற்பனையில் சாம்சங்-ஐ பின்னுக்குத் தள்ளி ஒன்பிளஸ் முன்னணி இடம் பிடித்திருக்கிறது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் சிறிய ஸ்டார்ட்-அப் நிறுவனமாக அறிமுகமான ஒன்பிளஸ் சில ஆண்டுகளில் இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்திருக்கிறது. இந்தியாவில் பிரீமியம் ஸ்மார்ட்போன் விற்பனையில் சாம்சங்-ஐ பின்னுக்குத் தள்ளி ஒன்பிளஸ் முதலிடம் பிடித்திருக்கிறது. ஸ்மார்ட்போன் சந்தையின் பிரீமியம் பிரிவில் சாம்சங் நிறுவனத்தை விட ஒன்பிளஸ் இருமடங்கு பங்குகளை வைத்திருக்கிறது.

    2017-ம் ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் ஸ்மார்ட்போன் விற்பனை குறித்த சுவாரஸ்ய தகவல்களை சர்வதேச டேட்டா கார்பரேஷன் வெளியிட்டிருக்கிறது. சந்தையில் 48% பங்குகளுடன் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி ஒன்பிளஸ் பிரபலமான நிறுவனமாக இருக்கிறது.

    இதேபோன்று ஒன்பிளஸ் நிறுவன வருவாய் சுமார் 140 கோடி அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. இது ஒரு ஆண்டு நிலவரப்படி 55% வளர்ச்சி ஆகும். ஒன்பிளஸ் 5 மற்றும் ஒன்பிளஸ் 5T இதுவரையிலான விற்பனை அந்நிறுவனத்தின் முந்தைய சாதனைகளை கடந்திருப்பதால் விற்பனை தற்சமயம் குறையாது என எதிர்பார்க்கப்படுகிறது. 



    சக்திவாய்ந்த சிறப்பம்சங்கள் மற்றும் சரியான விலை நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதே அந்நிறுவன வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. ஃபிளாக்ஷிப் சிறப்பம்சங்கள் கொண்ட ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விலை வழக்கமான ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு நிர்ணயம் செய்யப்படுவதில் கிட்டத்தட்ட பாதி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    கடைசியாக அந்நிறுவனம் வெளியிட்ட ஒன்பிளஸ் 5T அந்நிறுவன விலைப்பட்டியலை கடக்காமல், பெரும்பாலான ஃபிளாக்ஷிப் சிறப்பம்சங்ளை வழங்கியுள்ளது. ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனின் அப்டேட் என்றாலும் தற்போதைய ஸ்மார்ட்போன்களின் டிரெண்டிங் அம்சங்களை ஒன்பிளஸ் வழங்கியது. 

    ஆல்-ஸ்கிரீன் டிஸ்ப்ளே, மெல்லிய பெசல்கள், மேம்படுத்தப்பட்ட கேமரா என சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சிறப்பம்சங்களை புதிய ஒன்பிளஸ் 5T மாடலில் வழங்கியுள்ளது. இவற்றை சீராக இயக்க சக்திவாய்ந்த ஹார்டுவேர் அம்சங்களும் வழங்கப்பட்டிருக்கிறது.

    சிறப்பம்சங்களை கடந்து ஸ்மார்ட்போன்களை மக்களிடம் எடுத்துச் செல்ல போதுமான விளம்பர யுக்திகளை செய்வதில் ஒன்பிளஸ் எவ்வித குறையும் வைக்கவில்லை. ஒன்பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன்கள் நொடிகளில் விற்றுத் தீர்ந்து விடுவதே அந்நிறுவன விளம்பர யுக்திகளுக்கு சான்றாக இருக்கிறது.
    Next Story
    ×