search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சாம்சங் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் முன்பதிவு மற்றும் விநியோக விவரம்
    X

    சாம்சங் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் முன்பதிவு மற்றும் விநியோக விவரம்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு மற்றும் விநியோக விவரங்கள் வெளியாகி உள்ளது.
    புதுடெல்லி:

    சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் இன்னும் சில தினங்களில் நடைபெற இருக்கிறது. சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய கேலக்ஸி எஸ்9 சீரிஸ் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் ஏற்கனவே இணையத்தில் கசிந்திருக்கின்றன. 

    அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விற்பனைக்கு முன் சிலர் பெற முடியும் என தkவல் வெளியாகியுள்ளது. மேலும் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனின் தெளிவான புகைப்படங்கள் வெளியீட்டிற்கு முன் கசிந்துள்ளது.

    கேலக்ஸி எஸ்9 வெளியீடு குறித்து தி இன்வெஸ்டர் வெளியிட்டிருக்கும் தகவல்களில் புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள் மார்ச் 16-ம் தேதி சர்வதேச சந்தையில் வெளியிடப்படலாம் என கூறப்பட்டுள்ளது. தென்கொரியாவில் பிப்ரவரி 28-ம் தேதி முதல் முன்பதிவு துவங்கி மார்ச் 9-ம் தேதி முதல் மார்ச் 15-ம் தேதி வாக்கில் விநியோகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.



    புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் சாம்சங் பே, பிக்ஸ்பி, ஐரிஸ் அங்கீகார வசதி மற்றும் முக அங்கீகார வசதிகள் வழங்கப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் முன்பதிவுகள் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் பிப்ரவரி 25-ம் தேதியே துவங்கி மார்ச் 8-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது.

    புதிய ஸ்மார்ட்போனின் தோற்றம் முந்தைய கேலக்ஸி எஸ்8 சீரிஸ் போன்றே காட்சியளிக்கிறது. புதிய எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, மெல்லிய பெசல்கள், 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படுவதாக வெளியான தகவல்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமராவில் f/1.5 மற்றும் f/2.4 வேரியபிள் அப்ரேச்சர் வழங்கப்படுகிறது. 12 எம்பி இரண்டாவது கேமராவுடன் f/2.4 அப்ரேச்சர், 8 எம்பி செல்ஃபி கேமராவுடன் f/1.7 அப்ரேச்சர் வழங்கப்படுகிறது. கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனில் ஒற்றை பிரைமரி கேமரா 12 எம்பி சென்சார், f/1.5 மற்றும் f/2.4 வேரியபிள் அப்ரேச்சர் வழங்கப்படுகிறது. இவ்வகை அப்ரேச்சர் வீடியோக்களை (960 fps) நொடிக்கு 960 ஃபிரேம் வேகத்தில் பதிவு செய்யும் வசதி கொண்டதாகும். 



    ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்று கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் குவாட் ஹெச்.டி பிளஸ் 1440x2960 ரெசல்யூஷன் டிஸ்ப்ளே, எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 1440x2960 ரெசல்யூஷன் டிஸ்ப்ளே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் சாம்சங்-இன் 2.9 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் எக்சைனோஸ் 9810 சிப்செட் வழங்கப்படுகிறது.

    இத்துடன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படுகிறது. இதுதவிர கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் IP68 சான்று, கைரேகை சென்சார், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட், ஐரிஸ் ஸ்கேனர், முக அங்கீகார வசதி மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது.

    கனெக்டிவிட்டி அம்சங்களை பொருத்த வரை யு.எஸ்.பி டைப்-சி, எல்டிஇ, ப்ளூடூத் 5.0, டூயல் சிம் ஸ்லாட், டூயல் பேண்ட் வைபை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. கேலக்ஸி எஸ் 9 ஸ்மார்ட்போனில் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் எஸ் 9 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தகியூட்டப்படுகிறது.

    சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் மிட்நைட் பிளாக், டைட்டானியம் கிரே, லிலாக் பர்ப்பிள் மற்றும் கோரல் புளூ நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய எஸ்9 சீரிஸ் முன்பதிவுகள் அறிமுக நிகழ்வில் துவங்கி மார்ச் 8-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. எஸ்9 சீரிஸ் விலையை பொருத்த வரை எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை முந்தைய எஸ்8 சீரிஸ்-ஐ விட 100 டாலர்கள் வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×