search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரான் ராணுவ அணிவகுப்பில் 25 வீரர்களின் உயிரை பறித்த பயங்கரவாதி சுட்டுக் கொலை
    X

    ஈரான் ராணுவ அணிவகுப்பில் 25 வீரர்களின் உயிரை பறித்த பயங்கரவாதி சுட்டுக் கொலை

    ஈரான் ராணுவ அணிவகுப்பில் தாக்குதல் நடத்தி 25 வீரர்களின் உயிரை பறித்த பயங்கரவாதி அபு ‌ஷகா மற்றும் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். #Iran #MilitaryParade
    தெக்ரான்:

    ஈரானில் கடந்த செப்டம்பர் 22-ந்தேதி ராணுவ அணிவகுப்பு நடந்தது. அதில் புகுந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். அதில் 25 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

    இதற்கு சன்னி பிரிவை சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் மற்றும் ஈரானில் அரசுக்கு எதிராக இயங்கும் ஆஷ்வாஸ் தேசிய இயக்கத்தினர் பொறுப்பு ஏற்றனர். இந்த இயக்கம் எண்ணை வளம் மிகுந்த குசஸ்தான் மாகானத்தை பிரித்து தனி நாடாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

    சன்னி பிரிவினர் மெஜாரிட்டியாக வாழும் வசதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீர நாடுகள் தான் பயங்கரவாதிகளை தூண்டி விட்டு ராணுவ அளிவகுப்பில் தாக்குதல் நடத்தியுள்ளனர் என ஈரான் தலைவர் அயாதுல்லா அலி காமெனி தெரிவித்து இருந்தார். அதை சவுதிஅரேபியாவும், ஐக்கிய அரபு அமிரகமும் மறுத்தன.



    இதற்கிடையே ராணுவ அணிவகுப்பில் தாக்குதல் நடத்திய பயங்ரவாதிகளை ஈரான் அரசு தேடி வந்தது. அவர்கள் ஈராக்கில் தியாலா மாகானத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

    அதை தொடர்ந்து அங்கு நுழைந்த ஈரான் ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தியது. அதில் ராணுவ அணிவகுப்பில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி அபு ‌ஷகா மற்றும் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இவர்களில் அபு ‌ஷகா ராணுவ அணி வகுப்பில் தாக்குதல் நடத்த முக்கிய திட்டம் வகுத்து கொடுத்தவன். #Iran #MilitaryParade
    Next Story
    ×