search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்காளதேசத்துக்கான விசா கட்டுப்பாடுகளை தகர்க்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது இந்தியா
    X

    வங்காளதேசத்துக்கான விசா கட்டுப்பாடுகளை தகர்க்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது இந்தியா

    வங்காளதேச நாட்டுக்கு 3 நாள் அரசு முறை பயணமாக சென்றுள்ள உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் முன்னிலையில், இருநாடுகளுக்கு இடையேயான போக்குவரத்து தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. #RajnathSingh #Bangladesh
    டாக்கா:

    மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், 3 நாள் அரசு முறை பயணமாக வங்கதேசம் சென்றுள்ளார். இந்த பயணத்தில் அந்நாட்டின் உள்துறை மந்திரி அசாதுஸ்ஸமான் கானை சந்தித்து இருநாட்டு உறவுகள், பாதுகாப்பு போன்றவை குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.



    மேலும், வங்காளதேசத்தில் உள்ள தகேஸ்வரி ஆலையத்தில் தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து வங்கதேசத்தின் தந்தை என்றழைக்கப்படும் சேக் முஜீபுர் ரஹ்மானுக்கு மரியாதை செலுத்தும் வகையில், பங்காபந்து அருங்காட்சியகத்துக்கு சென்று பார்வையிட்டார்.

    இந்நிலையில், இருநாடுகளுக்கும் இடையேயான விசா தொடர்பாக சில கட்டுப்பாடுகளை எளிமையாக்கும் வகையில் புதிய ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் ஐந்தாண்டுகளுக்கான தொடர் விசாவை பெற முடியும் என கூறப்பட்டுள்ளது. #RajnathSingh #Bangladesh
    Next Story
    ×