search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இணைந்த இரு துருவங்கள்- வட கொரியா தென் கொரியா தலைவர்கள் மாநாடு தொடங்கியது
    X

    இணைந்த இரு துருவங்கள்- வட கொரியா தென் கொரியா தலைவர்கள் மாநாடு தொடங்கியது

    கொரிய தீபகற்பத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட கொரியா, தென் கொரியா தலைவர்கள் இடையிலான உச்சி மாநாடு இன்று தொடங்கியது.#KimJongUn #MoonJae #KoreanWar
    சியோல்:

    கொரியப்போர் 1953-ம் ஆண்டு முடிந்த பின்னரும் வட கொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக பனிப்போர்  காலமாக நீடித்து வந்தது. குறிப்பாக, வடகொரியா நடத்தி வந்த தொடர் ஆணு ஆயுத சோதனையானது, கடந்த இரு ஆண்டுகளாக மோதல் போக்கை அதிகரிக்கச் செய்தது.

    இந்த நிலையில் சமீபத்தில் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. அணு ஆயுத சோதனைகளால் தென்கொரியாவை மிரட்டி வந்த வடகொரியா இறங்கி வந்தது. தென்கொரியாவுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்கவும் முன்வந்ததுடன், அணு ஆயுத திட்டங்களை கைவிடுவதாக சமீபத்தில் அறிவித்தது. இரு நாடுகளின் உயர்மட்ட தூதுக்குழுவினர் சந்தித்து பேசினர். அதைத் தொடர்ந்து இரு நாடுகள் இடையேயான பகை விலகத்தொடங்கியது.

    அதன்பின்னர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னும், தென் கொரியாவின் அதிபர் மூன் ஜே இன்னும் உச்சி மாநாட்டில் சந்தித்துப் பேச முடிவானது. இதற்காக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் தென்கொரியா சென்றார். அவருடன் 9 பேர் அடங்கிய உயர்மட்டக் குழுவினரும் அங்கு சென்றனர்.

    இந்நிலையில் திட்டமிட்டபடி இரு தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு இன்று தொடங்கியது. இரு நாடுகளின் எல்லையையொட்டி தென்கொரிய பகுதியில் உள்ள பன்முஞ்சோமில் நடைபெற்ற இந்த மாநாட்டின் துவக்கத்தில், இரு நாட்டு தலைவர்களும் ஒருவரையொருவர் கைகுலுக்கி பரஸ்பரம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். இது இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவின் புதிய தொடக்கமாக அமைந்தது.



    இந்த மாநாட்டில் எடுக்கப்படும் தீர்மானம், இரு நாடுகள் இடையேயான கொரியப்போரை முறைப்படி முடிவுக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கொரிய போர் முடிந்த பின்னர் வடகொரிய தலைவர் ஒருவர், தென்கொரியாவுக்கு சென்றது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடததக்கது.#KimJongUn #MoonJae #KoreanWar
    Next Story
    ×