search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வட கொரியா"

    • வடகொரியா அடிக்கடி ஜப்பான் கடற்கரை பகுதியில் சோதனை நடத்தி வருகிறது.
    • கொரிய தீபகற்பம் விவகாரத்தில் வடகொரியா- அமெரிக்காவுக்கு ஆதரவாக ஜப்பான் இருந்து வருகிறது.

    தென்கொரியா மற்றும் அமெரிக்காவு தங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என கருதும் வட கொரியா, இரு நாடுகளுக்கும் எதிராக அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. கொரிய தீபகற்பத்திற்கும் ஜப்பான் கடல் பகுதிக்கும் இடையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் வடகொரியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது.

    இந்த விசயத்தில் தென்கொரியா- அமெரிக்காவுடன் ஜப்பான் இணைந்து வடகொரியாவை எதிர்த்து வருகிறது.

    இந்த நிலையில் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக, வட கொரியா அதிபரின் சகோதரி கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார்.

    ஒரு டி.வி. சேனலில் பேசும்போது ஜப்பான் பிரதமர் தனது விருப்பத்தை தெரிவித்ததாக கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார். அந்த டி.வி. பெயர் அவர் குறிப்பிடவில்லை.

    கிம் யோ ஜாங்

    மேலும், "இருநாடுகளுக்கு இடையிலான உறவு மேம்படுவது ஜப்பான் கையில் உள்ளது. ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் கடத்தப்பட்ட கடந்த கால குற்றச்சாட்டை தீர்ப்பது தொடர்பான முயற்சியை கடைபிடித்தால், தனது பிரபலத்தை உயர்த்துவதற்காகவே பேச்சுவார்த்தை நடத்துவார் என்ற விமர்சனத்தை அவரால் தவிர்க்க முடியாது" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உதவியாளர், தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியை அலுவலக பணிக்கு பயன்படுத்தினார்
    • இணையவழியாக கிரிப்டோகரன்சிகளை திருட வட கொரியா பலமுறை முயன்றுள்ளது

    கடந்த நவம்பர் மாதம், தென் கொரியாவின் அதிபர் யூன் சுக் யோல் (Yoon Suk Yeol), 3-நாள் சுற்று பயணமாக இங்கிலாந்து சென்றிருந்தார். அப்போது அவர் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கையும் சந்தித்து பேசினார்.

    யூன், இங்கிலாந்து சென்ற காலகட்டத்தில் அவரின் முக்கிய உதவியாளரின் மின்னஞ்சல்களை வட கொரியா "ஹேக்கிங்" செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அதிபரின் உதவியாளர், தனது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியை அலுவலக பணிக்கு பயன்படுத்திய போது அதை வட கொரியா ஹேக் செய்தது. இந்த ஹேக்கிங் மூலம், அதிபர் யூனின் பயண அட்டவணையையும், அதிபர் அனுப்பிய செய்திகளையும் வட கொரியா களவாடியுள்ளது.

    ஆனால், ஹேக்கிங் மூலம் என்னென்ன தகவல்கள் களவு போனது எனும் விவரத்தை தென் கொரிய அரசு இதுவரை வெளியிடவில்லை.

    தென் கொரிய அதிபரின் உதவியாளர் குழுவை சேர்ந்த ஒருவரின் மின்னஞ்சல் கணக்குகளை வட கொரியா ஹேக்கிங் செய்திருப்பது இதுதான் முதல்முறை.

    வட கொரியா, தனது நாட்டின் ராணுவ மற்றும் அணு ஆயுத தேவைகளுக்கான பணத்திற்காகவும், தென் கொரியாவின் அரசாங்க ரகசியங்களை தெரிந்து கொள்ளவும், தென் கொரியா மீது நீண்ட காலமாக பல வழிமுறைகளை கையாண்டு சைபர் தாக்குதல் நடத்தி வருகிறது. அணு ஆயுத பரிசோதனைகளுக்கு தேவைப்படும் பணத்திற்கு, இணையவழியாக கிரிப்டோகரன்சிகளை திருடுவதை வட கொரியா பல முறை முயன்றுள்ளது.

    தென் கொரிய அதிபர் இங்கிலாந்து செல்லும் முன்னரே ஹேக்கிங் குறித்து கண்டறியப்பட்டு, தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக இது குறித்து தென் கொரியா தெரிவித்தது.

    • அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் நாடுகளின் கடற்படை ஜேஜு தீவுப்பகுதியில் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டது.
    • இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா நீருக்கடியில் அணு ஆயுத அமைப்பை சோதனை செய்தது.

    சியோல்:

    வட கொரியா, தென் கொரியா நாடுகளுக்கு இடையிலான மோதலால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

    அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து அவ்வப்போது கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன. இதற்கு பதிலடியாக வட கொரியாவும் தனது ராணுவ பலத்தைக் காட்டிவருகிறது. இப்படி இருதரப்பினரும் தங்கள் வலிமையைக் காட்டி வருவதால் பதற்றம் நீடிக்கிறது.

    சமீபத்தில் அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படையினர் ஜேஜு தீவு பகுதியில் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டனர். வடகொரியாவின் ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த பயிற்சியில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

    இந்தப் பயிற்சியில் 3 நாடுகளையும் சேர்ந்த 9 போர்க்கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன. அமெரிக்காவின் விமானம்தாங்கி கப்பலான யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் என்ற கப்பலும் இதில் அடங்கும்.

    இந்நிலையில், இந்த கூட்டு பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா இன்று நீருக்கடியில் அணு ஆயுத அமைப்பை சோதனை செய்தது.

    இதுதொடர்பாக வட கொரிய ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் இணைந்து நடத்திய பயிற்சிகள் வட கொரியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. எனவே பதிலடி கொடுக்கும் வகையில், கொரியாவின் கிழக்குக் கடல் பகுதியில் கட்டமைக்கப்பட்டு வரும் நீர்மூழ்கி அணு ஆயுத அமைப்பான ஹேயில்-5-23-ன் முக்கியமான சோதனை நடத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.

    • போர் தேவைப்பட்டால் அதை தவிர்க்க மாட்டோம் என்றார் கிம்
    • பன்மடங்கு வலிமையுடன் தாக்குவோம் என்கிறது தென் கொரியா

    வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் (Kim Jong Un).

    "சுப்ரீம் பீபிள்'ஸ் அசெம்பிளி" எனும் வட கொரிய பாராளுமன்றத்தில் கிம் உரையாற்றினார். அதில் தென் கொரியாவுடனான உறவு குறித்து கருத்து தெரிவித்தார்.

    அப்போது கிம் கூறியதாவது:

    தென் கொரியாதான் எங்கள் முதல் எதிரி. ஒரு வேளை போர் தேவைப்பட்டால் அதை தவிர்க்க கூடாது.

    தென் கொரியாவுடன் இணைப்புக்கு இனி சாத்தியமில்லை.

    வட கொரியாவிற்கு பிரதான எதிரி தென் கொரியாதான் என வலியுறுத்தும் வகையில் வட கொரிய மக்களுக்கு கற்பிக்க வேண்டும். இதற்காக தேவைப்பட்டால் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும்.

    இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைகள் சரியான முறையில் வரையறுக்கப்பட வேண்டும்.

    நாம் போரை விரும்பவில்லை; ஆனால், தேவைப்பட்டால் ஈடுபட தயங்கவே கூடாது.

    தென் கொரியா முழுவதையும் ஆக்கிரமிக்க வட கொரியா தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும். அவர்கள் நமது உடன்பிறப்புகள் அல்ல.

    இரு நாடுகளுக்கிடையேயான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இரு நாடுகளுக்கு இடையே ஒற்றுமை ஏற்படுத்த முனைந்து வந்த 3 அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு கிம் தடை விதித்துள்ளார்.

    கிம் ஜாங் உன் தெரிவித்த கருத்துகளுக்கு எதிர்வினையாக, "வட கொரியா தாக்குதலில் ஈடுபட்டால், பல மடங்கு வலிமையுடன் எதிர் தாக்குதலில் ஈடுபடுவோம்" என தென் கொரியா தெரிவித்தது.

    தென் கொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வலுப்பெற்று வரும் உறவை கண்டு கிம் அச்சப்படுவதாக சில அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    • ஆஸ்திரேலியாவில் இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.
    • புத்தாண்டடை முன்னிட்டு சீன அதிபர் ஜி ஜின்பிங் புத்தாண்டு உரை.

    உலகிலேயே முதலில் பசிபிக் கடலில் உள்ள கிறிஸ்துமஸ் தீவு என்ற கிரிபேட்டியில் இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.

    கிரிபேட்டியை தொடர்ந்து முதலாவது நாடாக நியூசிலாந்தில் 2024வது ஆண்டில் ஆங்கில புத்தாண்டு இந்திய நேரப்படி சரியாக 4.30 மணிக்கு பிறந்தது.

    கிரிபேட்டி, நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.

    வாண வேடிக்கையுடன் ஆஸ்திரேலிய மக்கள் புத்தாண்டை வரவேற்று, பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும், ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர்.

    இந்நிலையில், சீனா, வட மற்றும தென் கொரியாவில் இந்திய நேரப்படி சரியாக 8.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.

    புத்தாண்டடை முன்னிட்டு சீன அதிபர் ஜி ஜின்பிங் புத்தாண்டு உரை நிகழ்த்தினார்.

    ஜி ஜின் பிங் தனது உரையில், " பிரதமர் தைவானுடன் மீண்டும் ஒன்றிணைவது தவிர்க்க முடியாதது" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • மக்கள் தொகை 2.6 கோடி மட்டும் தான் என்றும் கூறப்படுகிறது.
    • பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும்.

    கடுமையான மற்றும் வித்தியாசமான சட்ட விதிகளை கொண்ட நாடாக வட கொரியா அறியப்படுகிறது. இந்த நாட்டினை கிம் ஜாங் உன் சர்வாதிகாரி போன்று ஆட்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மிகச்சிறிய நாடான வடகொரியாவில் மக்கள் தொகை 2.6 கோடி மட்டும் தான் என்றும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில், வடகொரியாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருவாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக அந்நாட்டில் பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என கூறி மேடையிலேயே கிம் ஜாங் உன் கண்ணீர் விட்டு அழதார்.

    இது குறித்து பேசிய அவர், "நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் பெண்கள் அதிக குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும். இது தான் நம் நாட்டை பாதுகாக்கும். பிறப்பு விகிதம் குறைவதை தடுப்பதோடு, குழந்தைகளை பராமரித்து நன்றாக வளர்க்க வேண்டும். அவர்களுக்கு முறையான கல்வி வழங்க வேண்டும். இதனை செய்ய நான் தயாராக இருக்கிறேன்," என்று தெரிவித்தார்.

    குழந்தை பிறப்பு குறித்து பேசியதோடு, அதே மேடையில் கிம் ஜாங் உன் கண்ணீர் விட்டு அழுதார். கிம் ஜாங் உன் கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

    • ரஷியாவுக்கு வடகொரியா முழு ஆதரவு தெரிவிப்பு
    • கடந்த சில நாட்களாக ரஷியாவின் ஆயுதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார் கிம் ஜாங் உன்

    வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ரஷியாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். அங்கு சென்றுள்ள அவர் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ரஷியாவிற்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

    அதன்பிறகு ரஷியாவின் ஆயுத தொழிற்சாலைகளுக்கு சென்று, ஆயுதங்களை பார்வையிட்டு வருகிறார். ஏற்கனவே கிம் ஜாங் உன் பயணம் குறித்து தென்கொரியா கவலை தெரிவித்திருந்தது. ஆயுதங்கள் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை ரஷியா வழங்கக்கூடும் எனத் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் ரஷியாவின் கிழக்குப்பகுதியில் தொடர்ந்து சுற்றுப் பயணத்தில் இருக்கும் கிம் ஜாங் உன், இன்று விளாடிவோஸ்டோக்கில் அணுஆயுதங்களை சுமந்து செல்லும் விமானங்களை ஆய்வு செய்துள்ளார்.

    உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்படும் Tu-160, Tu-95, Tu-22 ஆகிய விமானங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். இந்த விமானங்கள் தற்போது உக்ரைன் மீது ஏவுகணைகளை வீச பயன்படுத்தப்படுகிறது.

    புதின்- கிம் ஜாங் உன் கடந்த புதன்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின்போது, ரஷியாவிற்கு வடகொரியா ஆயுதங்கள் வழங்குவதற்குப் பதிலாக, ரஷியாவின் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள வடகொரியா ரஷியாவிடம் கேட்பது தொடர்பான ஒப்பந்தம் போடப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

    அடுத்ததாக ரஷியாவின் கப்பற்படைக்கு சென்று கிம் ஜாங் உன் ஆய்வு செய்ய இருப்பதாக தெரிகிறது. இதில் இருந்து ரஷியாவுக்கு வட கொரியா ஆயுதங்கள் வழங்க இருப்பதும், ரஷியாவின் தொழில்நுட்பத்தை வடகொரிய பயன்படுத்த வாய்ப்புள்ளதும் ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது.

    உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உதவி செய்து வரும் நிலையில், உக்ரைன் பொரில் மிகப்பெரிய அளவில் ஆயுதங்களை செலவழித்துள்ள ரஷியாவுக்கு தற்போது ஆயுதங்கள் தேவைப்படுகிறது. இதனால் வடகொரியாவின் உதவியை நாடியுள்ளது. வெளிநாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதில், அமெரிக்காவுக்கு இணயைாக ரஷியா திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2022-ல் இருந்து சுமார் 100 ஏவுகணைகளை செலுத்தியுள்ளது
    • ரஷியாவுக்கு ஆயுதம் வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் ஏற்பட்ட வாய்ப்பு

    தனது நாட்டிற்கு எப்போதெல்லாம் அச்சுறுத்தல் என நினைக்கிறதோ, அப்போதெல்லாம் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்துவது வழக்கம். சமீபத்தில் அமெரிக்க அணுஆயுத கப்பல் தென்கொரிய கடற்பகுதிக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஏவுகணைகளை செலுத்தி எச்சரித்தது.

    இந்த நிலையில் இன்று காலை கிழக்கு கடற்கரையில் ஏவுகணை செலுத்தியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. அணுஆயுதங்களை சுமந்து செல்லும் வல்லமை கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணையை செலுத்தியதாக ஜப்பான் பிரதமர் அலுவலகமும் தெரிவித்துள்ளது.

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரஷியாவிற்கு சுற்றுப் பயணம் செய்துள்ளார். அவர் புதினை சந்திக்க இருக்கிறார். இருநாட்டு தலைவர்கள் சந்திப்பின்போது ஆயுதம் வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷியாவுக்கு, வடகொரியா ஆயுதம் வழங்கினால் அது எரியும் விளக்கில் எண்ணெய் ஊற்றும் கதையாக அமைந்து விடும் என உலக நாடுகள் தங்களது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே, ரஷியா- உக்ரைன் போர் மீது உலகத் தலைவர்கள் கவனம் திரும்பிய நிலையில், கடந்த ஆண்டில் இருந்து சுமார் 100 ஏவுகணைகளை வடகொரியா செலுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்கா- தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொண்டு வருகிறது
    • அமெரிக்க அணுஆயுத கப்பல்கள் தென்கொரியா கடற்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன

    வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை செய்து வரும் நிலையில், தென்கொரியா தன்னை பாதுகாத்துக் கொள்ள அமெரிக்காவுடன் நட்பு வைத்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்க போர் கப்பல்கள் கொரிய தீபகற்பத்தில் கால் பதித்துள்ளன.

    மேலும், அமெரிக்கா- தென்கொரிய ராணுவம் இணைந்து போர் பயிற்சியை கடந்த 21-ந்தேதி தொடங்கியுள்ளது. இந்த போர் பயிற்சி 11 நாட்கள் நடைபெற இருக்கிறது. இது வடகொரியாவை கோபத்திற்குள்ளாக்கியது. இதனால் அடிக்கடி ஆயுத தொழிற்சாலைகளில் காணப்பட்ட வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், நவீன ஆயுதங்களின் உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிட்டிருந்தார்.

    இந்த நிலையில் அமெரிக்கா- தென்கொரியா இணைந்து எப்போது வேண்டுமென்றாலும் வடகொரியா மீது போர் தொடுக்கலாம் என நினைக்கிறார். இதனால் அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பை முறியெடுக்க, தொடர்ந்து தயார் நிலையில் இருக்கும்படி வடகொரிய ராணுவத்தை கேட்டுக்கொண்டுள்ளார். கப்பல் படை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது உரையாற்றிய கிம் ஜாங் உன், இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    மேலும், அமெரிக்கா- தென்கொரியா- ஜப்பான் உச்சி மாநாட்டினை தொடர்ந்து, அமெரிக்கா அணு ஆயுதம் தொடர்பான மூலோபாய சொத்துகளை (போர்க்கப்பல் உள்பட) குவித்து, பயிற்சியில் ஈடுபட்டு வருவதை குறிப்பிட்டார்.

    இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. சில தினங்களுக்கு முன் வடகொரியா, தனது உளவு செயற்கைக்கோளை 2-வது முறையாக ஏவியது. பின்னர், இந்த முறையும் தோல்வியடைந்ததாக தெரிவித்திருந்தது.

    • வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.
    • இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நீடிக்கிறது.

    சியோல்:

    உலக நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நீடிக்கிறது.

    அமெரிக்கா- தென் கொரியாவுக்கு நேரடி எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வட கொரியா ஏவுகணைச் சோதனை நடத்தி வரும் நிலையில், தென் கொரியாவுக்கு சுமார் 150 டோமாஹாக் ஏவுகணைகளை எடுத்துச் செல்லும் திறன் கொண்ட அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்கா அனுப்பியது. யுஎஸ்எஸ் மிச்சிகன் எனப்படும் இந்த போர்க்கப்பல் உலகின் மிகப்பெரிய நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றாகும்.

    இந்நிலையில், வடகொரியா தனது கிழக்கு கடற்கரையில் இருந்து ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை கடலில் செலுத்தி சோதனை நடத்தியிருப்பதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

    • ஏவப்பட்ட ஏவுகணையின் வகையை ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகப்படுத்தியுள்ள நிலையில் இந்த ஏவுதல் நடப்துள்ளது.

    ஜப்பான் கடல் என்று அழைக்கப்படும் கிழக்குக் கடலில் வட கொரியா ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை வீசியதாக, தென் கொரியா தெரிவித்துள்ளது.

    வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே அதிகரித்து வரும் பதட்டங்களை எதிர்கொள்ளும் வகையில், சியோல் மற்றும் வாஷிங்டன் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகப்படுத்தியுள்ள நிலையில் இந்த ஏவுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜப்பானின் கடலோர காவல்படையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தென் கொரியாவின் ராணுவம் ஏவப்பட்ட ஏவுகணை வகையை ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விலையுயர்ந்த மதுபானங்கள் மற்றும் சிகரெட்டுகள் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்துவதாக தகவல்.
    • வடகொரியாவிற்கு உயர்தர மதுபானங்களை இறக்குமதி செய்ய ஆண்டுக்கு சுமார் ரூ.250 கோடி செலவிடுகிறார்.

    ரோம் நகரம் பற்றி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்து கொண்டிருந்தான் என படித்திருப்போம்.

    கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ள வடகொரியாவில், மக்கள் கடுமையான உணவு பஞ்சத்தில் தவிக்கும் நேரத்தில், அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் உன் தன் வாழ்வில் இன்பங்களை அனுபவிப்பதில் எல்லையற்ற ஈடுபாட்டுடன் உலகிலேயே சிறந்தவற்றை பயன்படுத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    விலையுயர்ந்த மதுபானங்கள் மற்றும் சிகரெட்டுகள் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தும் அவர் இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சியைத்தான் உண்கிறார்.

    பிரிட்டனின் பாதுகாப்பு நிபுணர் ஒருவர் கூறுகையில், "கிம் ஜாங் உன் ஒரு மது பிரியர். அதுலும் அவர் பிளாக் லேபிள் ஸ்காட்ச் விஸ்கி மற்றும் ஹென்னெஸ்ஸி பிராந்தி ஆகியவற்றையே விரும்பி பருகுகிறார். இதன் விலை, பாட்டில் ஒன்றுக்கு சுமார் ரூ.6 லட்சம் ($7000) ஆகும்" என கூறியிருக்கிறார்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு சீன பொது சுங்க நிர்வாகத்தால் பகிரங்கப்படுத்தப்பட்ட வர்த்தக தரவுகளின்படி, 40 வயதாகும் கிம், வடகொரியாவிற்கு உயர்தர மதுபானங்களை இறக்குமதி செய்ய ஆண்டுக்கு சுமார் ரூ. 250 கோடி ($30 மில்லியன்) செலவிடுகிறார்.

    கிம், மதுவகைகளை தவிர மிகச்சுவையான உணவு வகைகளையும் விரும்பி உண்கிறார். பார்மா ஹாம், (இத்தாலியின் பார்மா பிராந்தியத்தைச் சேர்ந்த ஒரு வகை உணவு) மற்றும் சுவிஸ் எமென்டல் சீஸ் ஆகியவற்றையே ரசித்து உண்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கிம் மற்றும் அவரது தந்தை, இருவருமே கோப் ஸ்டீக்ஸ் (Kobe steaks) எனப்படும் உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த மற்றும் மிகவும் விரும்பப்படும் மாட்டிறைச்சி மற்றும் கிறிஸ்டல் ஷாம்பெயின் (Cristal champagne) ஆகியவற்றை விரும்பி எடுத்துக் கொள்வார்கள்," என அவரது முன்னாள் சமையல்காரர் கூறியிருக்கிறார்.

    கிம் குடும்பத்திற்காக பிரத்தியேகமாக பீட்சா தயாரிக்க 1997ல் இத்தாலிய சமையல்காரர் ஒருவர் பணியமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தவிர, விலையுயர்ந்த பிரேசிலியன் காபியைத்தான் கிம் அருந்துகிறார். இதற்காக அவர் ஒரு வருடத்தில் சுமார் ரூ. 8 கோடி ($967,051) செலவழித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், மென்மையான தங்கப்படலத்தில் மூடப்பட்டிருக்கும் எவ்ஸ் ஸெயின்ட் லாரன்ட் (Yves Saint Laurent) வகை கருப்பு சிகரெட்டுகள்தான் அவர் விரும்பி புகைக்கிறார்.

    2014ம் ஆண்டு யூ.கே. மெட்ரோ (UK Metro) தெரிவித்த ஒரு செய்தியில் கிம் தொடர்ந்து "பாம்பு ஒயின்" உட்கொள்வதாக கூறியது. இது ஆண்மையை அதிகரிக்கும் என்றும் குழந்தைபேறுக்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதாகவும் பரவலாக நம்பப்படுகிறது.

    வடகொரியாவின் சர்வாதிகாரியான கிம், "அதிக மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல்" ஆகியவற்றில் ஈடுபடுவதாகவும், அவரது எடை 136 கிலோ தாண்டியுள்ளது என்றும் தென்கொரிய உளவுத்துறை அறிக்கைகள் வந்த பின்னர் கிம் ஜாங் உன்னின் ஆடம்பரமான உணவுமுறை பற்றிய செய்திகள் வந்துள்ளன.

    மார்ல்போரோ சிகரெட்டுகள் (Marlboro cigarettes) மற்றும் தூக்கமின்மைக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் சோல்பிடெம் (zolpidem) போன்ற மருந்துகள் உட்பட அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை கிம் பதுக்கி வைத்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×