என் மலர்
நீங்கள் தேடியது "North Korean leader"
- கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையின்போது முதன்முதலில் பொதுவெளியில் தோன்றினார்.
- 1948 இல் வடகொரியா உருவானது முதல் ஆண்கள் மட்டுமே ஆட்சி செய்து வந்தனர்.
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், தனது 13 வயது மகள் கிம் ஜு யே-வை தனது அரசியல் வாரிசாக அறிவித்துள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
அடுத்த அதிபராக நியமிக்கப்பட வேண்டியவர் என்ற நிலையை கிம் ஜு யே எட்டியுள்ளதாகத் தென்கொரியாவின் தேசிய உளவு அமைப்பான NIS தெரிவித்துள்ளது.
2012 ஆம் ஆண்டு பிறந்த ஜு யே, 2022 நவம்பரில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையின்போது முதன்முதலில் பொதுவெளியில் தோன்றினார்.
அதைத்தொடர்ந்து கிம் ஜு யே இப்போது பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மட்டுமின்றி, அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளிலும் தனது கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.
சமீபத்திய ராணுவ அணிவகுப்புகள் மற்றும் அரசு கூட்டங்களில், தனது தந்தை கிம் ஜோங் உன்னுக்கு அடுத்தபடியாக அவருக்கு மிக உயரிய மரியாதை வழங்கப்படுவதை NIS சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள ஆளும் தொழிலாளர் கட்சியின் 9-வது மாநாட்டில், அவருக்கு அதிகாரப்பூர்வமான பதவி அல்லது பட்டம் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
இது நடந்தால், 1948 இல் வடகொரியா உருவானது முதல் ஆண்கள் மட்டுமே ஆட்சி செய்து வந்த கிம் வம்சத்தில், முதல்முறையாக கிம் ஜு யே பெண் அதிபராக பொறுப்பேற்பார்.
தென்கொரிய உளவு அமைப்பின் இந்த அறிக்கை சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வரும் சூழலில் இது குறித்து வடகொரியா இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
தற்போது 42 வயதாகும் கிம் ஜாங் உன் கடந்த 2011 டிசம்பரில் தனது தந்தை கிம் ஜோங் இல் மறைவுக்கு பின் வட கொரிய அதிபராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் முதல் முறையாக இன்று ரஷியாவின் விளாடிவோஸ்டோக் நகரில் சந்தித்து பேச உள்ளனர். இதற்காக வடகொரிய தலைவர் கிம் ஜாங் தனது சிறப்பு ரெயில் மூலம் சுமார் 9 மணிநேரம் பயணித்து நேற்று (ரஷியா நேரப்படி சுமார் 11 மணியளவில்) விளாடிவோஸ்டோக் நகரை வந்தடைந்தார்.
இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் இன்று விளாடிவோஸ்டோக் நகருக்கு வந்து சேர்ந்தார். தூர கிழக்கு மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் இரு தலைவர்களும் சந்தித்து பேச உள்ளனர். இந்த சந்திப்பின்போது இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
மேலும், கொரிய தீபகற்பத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாகவும் இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடகொரிய தலைவர் கிம்மை சந்திக்கும் ஆறாவது தலைவர் புதின் ஆவார். இதற்கு முன்பு, சீன அதிபர் ஜி ஜின்பிங், தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், சிங்கப்பூர் பிரதமர் லீ செயின் லூங், அமெரிக்க அதிபர் டிரம்ப், வியட்நாம் அதிபர் நிகுயென் ஆகியோர் கிம்மை சந்தித்துள்ளனர். #PutinKimSummit #VladimirPutin #KimJongUn
உலகின் இரு எதிர் துருவங்களாக விளங்கி வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்த சந்திப்பின் போது, கொரிய தீபகற்பம் அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றப்படும் என கிம் ஜாங் அன், டிரம்புக்கு உறுதி அளித்தார்.
இதையடுத்து, இருநாட்டு உறவில் நீண்டகாலமாக நிலவி வந்த பதற்றம் தணிந்து இணக்கமான சூழல் உருவானது. வடகொரியா தனது வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை அடியோடு நிறுத்தியது.
இதற்கு கைமாறாக அமெரிக்கா தங்கள் மீது விதித்த பொருளாதார தடைகளை முழுமையாக திரும்பப்பெறவேண்டும் என வடகொரியா எதிர்பார்த்தது. ஆனால் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடாத வரையில் பொருளாதார தடைகளை திரும்பப்பெற முடியாது என்பது அமெரிக்காவின் நிலைப்பாடாக அமைந்தது.
இந்த விவகாரம் குறித்து பேசி சுமுக தீர்வுகாண டிரம்ப், கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் முடிவு செய்தனர். அதன்படி கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இருநாட்டு தலைவர்கள் வியட்நாமில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எதிர்பார்த்தபடி இந்த சந்திப்பு இணக்கமாக நடைபெறவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த வடகொரியா, அமெரிக்கா தனது வாக்குறுதியை (பொருளாதார தடைகளை திரும்ப பெறுவது) நிறைவேற்றாத வரையில் அணுஆயுத விவகாரத்தில் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என அறிவித்தது.
இதனை கண்டிக்கும் விதமாக வடகொரியா மீது கூடுதல் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா மிரட்டல் விடுத்தது. இதனால் இருநாட்டு உறவில் மீண்டும் விரிசல் ஏற்படும் சூழல் உருவானது.
இந்த நிலையில், கிம் ஜாங் அன்னுடன் 3-வது முறையாக சந்திப்பு நடைபெறலாம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன் பத்திரிகையாளர்களை சந்தித்த டிரம்ப் இதனை தெரிவித்தார். அப்போது மூன் ஜே இன்னும் உடனிருந்தார்.
பத்திரிகையாளர்களிடம் டிரம்ப் கூறியதாவது:-
வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னுடன் 3-வது சந்திப்பு நடைபெறலாம். ஆனால் இது வேகமாக நடைபெறும் செயல்முறை இல்லை.
படிப்படியாகத்தான் நடக்கும். கடந்த 2 சந்திப்புகளும் மகிழ்ச்சிகரமாகவும், உற்சாகமாகவும் நடந்தன. கிம் ஜாங் அன் உடனான பொழுது ஆக்கப்பூர்வமாக கழிந்தது.
நான், கிம் ஜாங் அன் மற்றும் மூன் ஜே இன் ஆகியோர் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு உள்ளதா என்றால், அதுவும் நடைபெறும் என்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதன் பின்னர் முன் ஜே இன் பேசுகையில், ‘‘டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் இடையிலான பேச்சுவார்த்தை கொரிய தீபகற்பத்தில் நிலவிவந்த போர் பதற்றத்தை போதுமான அளவு தணித்துள்ளது. தற்போது அமைதி மேலோங்கி இருக்கிறது. எஞ்சி இருக்கும் பிரச்சினைகளும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்படும் என நான் முழுமையாக நம்புகிறேன்’’ என்றார்.
3-வது முறையாக சந்திப்பு நடக்கலாம் என டிரம்ப் கூறியிருப்பது குறித்து வடகொரியா உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. #Trump






