search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உச்சி மாநாடு"

    • பல்வேறு காரணங்களால் சில தலைவர்கள் வரவில்லை
    • சில நாட்டு தலைவர்களின் வருகை உறுதியாகவில்லை

    உலகின் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா, ரஷியா உட்பட இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பு ஜி20. இக்கூட்டமைப்பின் 18வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புதுடெல்லியில் வரும் 9, 10ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

    இதில் பங்கேற்க அனைத்து நாடுகளின் தலைவர்களும் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு சில அதிபர்கள் பங்கேற்க மாட்டார்கள் எனும் தகவல் வெளியாகியுள்ளது.

    தற்போதைய நிலவரப்படி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங்க், மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபெஸ் ஒப்ரடார் ஆகியோர் பல்வேறு காரணங்களால் வர மாட்டார்கள் என அந்நாடுகள் தெரிவித்துள்ளன.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜப்பான் பிரதமர் ஃப்யுமியொ கிஷிடா, ஜெர்மனி அதிபர் ஓலஃப் ஷோல்ட்ஸ், பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரான், சவுதி அரேபியா இளவரசர் மொஹம்மத் பின் சல்மான், தென் ஆப்பிரிக்கா அதிபர் சிரில் ரமபோஸா, தென் கொரியா அதிபர் யூன் சுக்-இயோல், ஆஸ்திரேலியா பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் மற்றும் துருக்கி அதிபர் ரெசிப் டாயிப் எர்டோகன் ஆகியோர் பங்கேற்கிறார்கள் என தெரிய வந்துள்ளது.

    இத்தாலி, இந்தோனேசியா, பிரேசில் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய உறுப்பினர்கள் பங்கேற்கிறார்களா இல்லையா என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

    இந்நிலையில், நைஜீரிய அதிபர் போலா டினுபு மற்றும் மவுரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத் ஆகியோர் வந்திறங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    ×