search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிம் ஜாங் உன் உடனான பேச்சுவார்த்தை பலனில்லை எனில் வெளியேறிவிடுவேன் - டிரம்ப்
    X

    கிம் ஜாங் உன் உடனான பேச்சுவார்த்தை பலனில்லை எனில் வெளியேறிவிடுவேன் - டிரம்ப்

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடன் நடத்த உள்ள பேச்சுவார்த்தையில் எந்த பலனும் இல்லை எனில் பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறிவிடுவேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
    நியூயார்க்:

    வட கொரியா - அமெரிக்கா இடையே இருந்த பகை தற்போது சற்று குறைந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே உறவை துளிர விட வரும் ஜூலை மாதத்தில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகிய இருவரும் சந்தித்து பேச உள்ளனர். உலகமே உற்று நோக்கும் இந்த சந்திப்பு எங்கு நடக்க போகிறது என்பது இன்னும் தெரியவில்லை. 

    பியாங்யங், சியோல், சிங்கப்பூர், உலன்பதார், ஸ்டால்க்ஹோம் உள்ளிட்ட பல முக்கிய நகரங்கள் பரிசீலனையில் உள்ளன. இந்நிலையில், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். புளோரிடா நகரில் நேற்று இரு தலைவர்களும் சந்தித்து பேசினர்.

    இதனை அடுத்து ஷின்சோ அபே, டிரம்ப் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, கிம் ஜாங் உடனான சந்திப்பு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த டிரம்ப், “கிம் ஜாங் உடனான பேச்சுவார்த்தை பலனில்லை எனில் பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறி விடுவேன்” என கூறினார்.

    சி.ஐ.ஏ இயக்குநர் மைக் போம்பே சமீபத்தில் வடகொரியாவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டு கிம் ஜாங் உன்னை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியானது. இதனை டிரம்ப் உறுதிப்படுத்தினார். போம்பேவின் பயணம் சிறப்பான ஒன்றாக இருந்துள்ளது என அவர் கூறினார்.  #TamilNews
    Next Story
    ×