என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
“எங்களிடமும் பெரிய வலிமையான அணுகுண்டு ஸ்விட்ச் உள்ளது” டிரம்ப் பதிலடி
Byமாலை மலர்3 Jan 2018 5:24 AM GMT (Updated: 3 Jan 2018 5:24 AM GMT)
அணுகுண்டுக்கான ஸ்விட்ச் எனது மேஜையில்தான் உள்ளது என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கூறியிருந்த நிலையில், எங்களிடமும் பெரிய, வலிமையான ஸ்விட்ச் உள்ளது என டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார்.
வாஷிங்டன்:
புத்தாண்டை ஒட்டி தொலைக்காட்சியில் பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், “ஒட்டுமொத்த அமெரிக்காவின் நிலப்பரப்பு நமது அணு ஆயுதத்தின் எல்லையில் உள்ளது. அதற்கான ஸ்விட்ச் எனது மேஜையில்தான் எப்போதும் உள்ளது” என கூறியிருந்தார்.
இந்நிலையில், கிம் ஜாங் உன்னுக்கு பதிலடி கொடுத்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, “வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் ‘அணுகுண்டுக்கான ஸ்விட்ச் அவரது மேஜையில் எப்போதும் இருக்கிறது’ என குறிப்பிட்டுள்ளார். அந்த பகுதியில் குறைபாடுகளுடன் பட்டினி கிடக்கும் யாராவது அவரிடம் கூறுங்கள், எங்களிடமும் அணுகுண்டு ஸ்விட்ச் உள்ளது. ஆனால், இது மிகப்பெரிதாக, வலிமையானதாக இருக்கும். முக்கியமாக எங்களது ஸ்விட்ச் செயல்படும் நிலையில் உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
சில மாதங்களாக இருவருக்கும் வார்த்தை மோதல்கள் இல்லாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டில் தொடக்கத்திலேயே வாய் தகராறு தொடங்கி விட்டது.

Next Story
×