search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வியட்நாம்: ஒரே நிற உடை அணிந்து கைக்குலுக்கி, புகைப்படம் எடுத்துகொண்ட டிரம்ப் - புதின்
    X

    வியட்நாம்: ஒரே நிற உடை அணிந்து கைக்குலுக்கி, புகைப்படம் எடுத்துகொண்ட டிரம்ப் - புதின்

    ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷ்ய அதிபர் புதினும் சந்தித்து கைக்குலுக்கி கொண்டனர்.
    ஹனோய்:

    ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு (Asia-Pacific Economic Cooperation, APEC) என்பது பசிபிக் கடலை ஒட்டிய நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்பு ஒன்றியம் ஆகும். பசிபிக் வட்டார நாடுகளின் பொருளாதாரம், வர்த்தகம், மற்றும் முதலீடுகள் போன்றவற்றை இவை ஆராயும். இந்நாடுகள் கூட்டாக உலகின் மொத்தப் பொருளாதாரத்தில் 60% விழுக்காட்டினைத் தன்னகத்தே கொண்டுள்ளன. இவ்வமைப்பின் தலைமையகம் சிங்கப்பூரில் அமைந்திருக்கிறது.

    ஏபெக் (APEC) நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் சீன தபெய் தவிர மற்றைய நாடுகளின் அரசுத் தலைவர்கள் கலந்து கொள்வார்கள். உச்சி மாநாடுகள் சுழற்சி முறையில் ஆண்டுதோறும் ஏபெக் நாடொன்றில் இடம்பெறும். அரசுத் தலைவர்கள் உச்சிமாநாடு நடைபெறும் நாட்டின் தேசிய உடையில் இம்மாநாட்டில் கலந்து கொள்வது ஒரு சிறப்பம்சமாகும்.



    இந்தாண்டிற்கான மாநாடு வியாட்நாமில் நடைபெற்று வருகிறது. எனவே அனைத்து தலைவர்களும் அந்நாட்டின் தேசிய உடையில் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். முதல் நாள் மாநாட்டின் போது அனைத்து தலைவர்களும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர். இந்த நிகழ்வின் போது அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்பும், ரஷ்யா அதிபர் புதினும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர். அப்போது இருவரும் ஒருவருக்கொருவரை பார்த்து சிரித்தபடி கைக்குலுக்கி கொண்டனர்.

    இந்த பயணத்தின் போது டிரம்ப், புதினை தனிப்பட்ட முறையில் சந்திக்க மாட்டார் என வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் செயலாளர் சாரா சாண்டர்ஸ் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
    Next Story
    ×