search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் மோடி கூட்டத்தில் பங்கேற்க வீடு, வீடாக சென்று மக்களை திரட்டும் பா.ஜனதா நிர்வாகிகள்
    X

    மதுரையில் மோடி கூட்டத்தில் பங்கேற்க வீடு, வீடாக சென்று மக்களை திரட்டும் பா.ஜனதா நிர்வாகிகள்

    மதுரையில் பா.ஜனதா நிர்வாகிகள் மதுரையின் 100 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களை நேரடியாக சந்தித்து பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பிதழ் வழங்கி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை மறுநாள் (27-ந்தேதி) மதுரை வருகிறார். இதனையொட்டி மண்டேலா நகர் வாஜ்பாய் திடலில் நடக்கும் மாநாட்டிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.

    இதனை முன்னிட்டு மதுரை மாநகர், புறநகர் மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் மதுரையின் 100 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களை நேரடியாக சந்தித்து பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுத்து வருகின்றனர்.

    மத்திய அரசின் ரூ.2.10 லட்சத்தில் மானிய வீடு, இலவச எரிவாயு, 12 ரூபாய் செலவில் ரூ.2 லட்சம் காப்பீடு, 200 ரூபாய் முதலீட்டில் செல்வ மகள் சேமிப்பு திட்டம் ஆகியவற்றுக்கு மதுரை மாவட்டத்தில் பொதுமக்களிடம் அமோக வரவேற்பு உள்ளது.

    இந்த திட்டத்தால் பயனடைந்தவர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு அழைப்பிதழை வழங்குகின்றனர்.

    இதுகுறித்து மதுரை மாநகர் மாவட்ட பா.ஜனதா தலைவர் சசிராமனிடம் கேட்டபோது, பிரதமர் மோடியின் பொதுக்கூட் டத்தில் மாநகர், புறநகர் மாவட்டம் சார்பில் குறைந்தபட்சம் 80 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள்.

    தமிழகத்தில் மதுரை மட்டுமின்றி 9 மாவட்டங்களிலும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (சக்தி கேந்திரா) மற்றும் மகாசக்தி கேந்திரா, மண்டல் தலைவர்கள், மோடியின் பொதுக்கூட்டத்துக்கு மக்கள் வருவதற்குரிய ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

    எனவே பிரதமர் மோடியின் மதுரை பொதுக் கூட்டம் வரலாறு காணாத வகையில் பொதுமக்களின் ஆரவார வரவேற்புடன் அமையும் என்றார்.

    Next Story
    ×