search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    த.மா.கா. 5-வது ஆண்டு விழா பொதுக்கூட்டம்- ஜிகே வாசன் அறிக்கை
    X

    த.மா.கா. 5-வது ஆண்டு விழா பொதுக்கூட்டம்- ஜிகே வாசன் அறிக்கை

    அரியலூரில் வருகிற 1-ந்தேதி நடைபெற உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 5-வது ஆண்டு பொதுக்கூட்டம் குறித்து ஜி.கே.வாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். #TamilMaanilacongress #GKVasan
    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ் மாநில காங்கிரஸ் 5-ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிற சிறப்பான நிகழ்வு வரும் டிசம்பர் 1-ந்தேதி அரியலூர் மாநகரில் மாபெரும் பொதுக்கூட்டமாக நடைபெற உள்ளது.

    தேசிய பார்வையில் மாநில நலனை முன்னிறுத்தி சிறப்பாக செயல்படும் த.மா.கா “தமிழகம் முழுவதும்“ உள்ள தேசிய, மாநில கட்சிகளுக்கு இணையாக மக்கள் பிரச்சனைகளை கைகளில் எடுத்து ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், போராட்டம், பொதுக்கூட்டம், இயக்க நிகழ்ச்சிகள் என்று இடைவிடாது நடத்திக் கொண்டிருப்பதால் த.மா.கா நல்ல இயக்கமாக, அசைக்க முடியாத சக்தியாக உருவாகி உள்ளது.

    இனிவரும் காலங்களில் நாம் ஆட்சி அமைப்பதற்கும் அல்லது மற்ற கட்சியினர் ஆட்சி அமைப்பதற்கும் த.மா.கா தான் முதன்மையான, முக்கிய கட்சியாக விளங்கும் என்பதை நம்மால் உறுதிப்படக் கூறமுடியும். இதற்கு தமிழகத்தில் உள்ள மாநில, மாவட்ட, நகர, கிராம, பேரூராட்சி அளவில் உள்ள த.மா.கா தொண்டர்களின் கடுமையான உழைப்பு பேருதவியாக இருக்கிறது என்பதை பெருமையோடு நினைவு கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

    தங்களது குடும்பத்தாருடனும், உற்றார் உறவினர்களுடனும் நமது இயக்க நண்பர்களுடனும், நமது தொண்டர்களுடனும் படை சூழ அரியலூர் மாநகரத்திற்கு டிசம்பர் 1-ந்தேதி மாலை 4 மணிக்கு அணி அணியாக, அலை கடலாய் ஆர்ப்பரித்து பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனார் ஆகியோரது புகழ் பாடி, த.மா.கா கொடி ஏந்தி, வீறு நடைபோட்டு வந்து விழாவை சிறப்பாக்கிட வேண்டுகிறேன்.

    நாளையின் வெற்றி நமதே என்ற நம்பிக்கையோடு வாருங்கள். சந்திப்போம், சங்கமிப்போம், புதிய வரலாறு படைப்போம்.

    இவ்வாறு ஜி.கே.வாசன் கூறி உள்ளார். #TamilMaanilacongress #GKVasan

    Next Story
    ×