search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கனமழை நீடிப்பு- பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    கன மழை தொடர்ந்து பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. #VaigaiDam #PeriyarDam

    கூடலூர், நவ.24-

    கடந்த சில நாட்களாக கேரள மாநிலம் மற்றும் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் கன மழை நீடித்ததால் அணைக்கு வரும் நீர்வரத்து 1882 கன அடியில் இருந்து 2223 கன அடியாக உயர்ந்துள்ளது.

    இதனால் தமிழக பகுதிக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று வரை 900 கன அடி திறந்து விடப்பட்ட நிலையில இன்று காலை 4 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    மூல வைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள் ளதால் வைகை அணைக்கு நீர்வரத்து 2664 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 62.04 அடியாக உள்ளது. அணையில் இருந்து 3 மாவட்ட பாசனத்திற்காக 3810 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணை நீர் மட்டம் 55 அடியாக உள்ளதால் அணைக்கு வரும் 100 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126 அடியாக உள்ளது. 93 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 16.2, தேக்கடி 12.2, சண்முகாநதி அணை 4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. இன்று காலையும் மழை தொடர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×