search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துரைப்பாக்கம் சூப்பர் மார்க்கெட்டில் போலி பே.டி.எம். செயலி மூலம் பொருட்கள் வாங்கி மோசடி - 3 பேர் கைது
    X

    துரைப்பாக்கம் சூப்பர் மார்க்கெட்டில் போலி பே.டி.எம். செயலி மூலம் பொருட்கள் வாங்கி மோசடி - 3 பேர் கைது

    துரைப்பாக்கம் சூப்பர் மார்க்கெட்டில் போலி பே.டி.எம். செயலி மூலம் பொருட்கள் வாங்கி மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Arrest #FakePaytmCheating

    சென்னை:

    கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை பயன்படுத்தி சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் பொருட்களை வாங்குவது வழக்கம்.

    இப்போது பே.டி.எம். செயலி மூலமாகவும் பொருட்கள் வாங்குவது அதிகரித்துள்ளது. சிறிய வணிக நிறுவனங்களில் தொடங்கி பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரையில் பே.டி.எம். செயலி பயன் பாட்டில் உள்ளது. பொருட்களை வாங்கிய பின்னர் செல்போனில் உள்ள பே.டி.எம். செயலியை பயன் படுத்தி வியாபாரிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணத்தை செலுத்தலாம்.

    இந்த டிஜிட்டல் பரிவர்த் தணையில் மோசடி செய்யப்பட்டுள்ளது. பே.டி.எம்.செயலியை போலியாக உருவாக்கி அதன் முலம் பொருட்களை வாங்கி ரூ.30 ஆயிரம் அளவுக்கு மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை துரைப்பாக்கத்தில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருபவர் வேல்ராஜ். இவரது கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 3 வாலிபர்கள் சென்று பொருட்கள் வாங்கினர். இதற்காக பே.டி.எம். செயலியை பயன்படுத்தி ரூ.30 ஆயிரம் பணமும் செலுத்தினர்.

    ஆனால் பணம் வாங்கிய 3 வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து உரிமையாளர் வேல்ராஜின் வங்கி கணக்குக்கு பணம் போய் சேரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி துரைப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    இதனைத் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். சூப்பர் மார்க் கெட்டுக்கு மீண்டும் பொருட்கள் வாங்க வந்த போதே பிடிபட்டனர். அவர்களது பெயர் யசாங், கிரண்குமார், செல்லி.

    இதில் கிரண்குமாரும், யசங்கும் கல்லூரி மாணவர்கள். பெங்களூரைச் சேர்ந்த இவர்கள் சென்னையில் தங்கி இருந்து தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்கள். இன்னொரு வாலிபரான செல்லி கேரளாவை சேர்ந்தவர். பி.டெக் முடித்துள்ள இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் வேலை தேடி சென்னைக்கு வந்துள்ளார். 3 பேரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். #Arrest #FakePaytmCheating

    Next Story
    ×