search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெயின் அருவியில் குறைந்த அளவில் தண்ணீர் விழும் காட்சி.
    X
    மெயின் அருவியில் குறைந்த அளவில் தண்ணீர் விழும் காட்சி.

    குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது - சுற்றுலா பயணிகள் படையெடுப்பு

    குற்றால அருவிகளில் குறைவாக தண்ணீர் விழுவதால் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது
    தென்காசி:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் போது குற்றாலத்தில் சீசன் தொடங்கும். இதை தொடர்ந்த ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட்டு மாதங்களில் குற்றால அருவிகளில் தண்ணீர் நன்றாக விழும்.

    குற்றால சீசனையொட்டி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் வருவார்கள். நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்குவதற்கு முன்பாகவே சீசனுக்கான அறிகுறி காணப்பட்டது. கடந்த வாரம் சாரல் மழை விட்டு, விட்டு பெய்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் மிதமாக விழுந்தது.

    மேலும் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை பெய்ததால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    குற்றாலத்தில் சீசன் களை கட்ட தொடங்கி பிரதான அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் விழ தொடங்கியதை அறிந்த சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு படையெடுத்து வந்தனர். அருவிகளில் தண்ணீர் விழத்தொடங்கியதால் சீசன் தொடங்கி விட்டதாக சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்யவில்லை. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. இன்று காலை குற்றாலத்தில் குறைவாக தண்ணீர் விழுந்தாலும் இதமான தட்பவெப்பநிலை காணப்படுகிறது. இதையடுத்து சுற்றுலாப்பயணிகளின் கூட்டமும் அதிகமாகவே காணப்படுகிறது.


    Next Story
    ×