search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை எரித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சாலை மறியல்
    X

    எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை எரித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சாலை மறியல்

    வேல்முருகனை கைது செய்ததை கண்டித்து வாழ்வுரிமை கட்சியினர் எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை எரித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    ஓமலூர்:

    கேரள மாநிலத்தில் இருந்து விஷ்வ இந்து பரி‌ஷத்தின் ரதயாத்திரை தமிழகத்திற்கு வருவதை தடுத்து நிறுத்த வேண்டி சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் ரெயில் மூலம் செல்ல முயன்ற போது செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

    இதை கண்டித்து சேலம் மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் ஜெயமோகன் தலைமையில் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் ஓமலூர் அருகே உள்ள கோட்டகவுண்டம்பட்டி தனியார் சுங்கச்சாவடி முன்பு நள்ளிரவு 12 மணிக்கு ஓன்று கூடினர்.



    வேல்முருகனை கைது செய்ததை கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் கோ‌ஷங்கள் எழுப்பினர். பின்னர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் தனியார் சுங்க சாவடி முன்பு சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சூரமங்கலம் போலீசார் முதலமைச்சரின் உருவ பொம்மையை எரித்த தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், மாவட்ட தலைவர் முருகன், ஒன்றிய செயலாளர் அன்புராஜா, சேட்டு, உள்ளிட்ட 25 பேரை கைது செய்தனர். #tamilnews
    Next Story
    ×