search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உருவ பொம்மை"

    • நேர்த்திக்கடன் செலுத்த உருவ பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    • 2 குடும்பங்கள் வாழையடி வாழையாக இந்த தொழிலை செய்து வருகின்றனர்.

    சோழவந்தான்

    புகழ்பெற்ற சோழ வந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டு வருகிற 22-ந் தேதி கொடி யேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. 17 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. சோழவந்தான் மற்றும் சுற்றியுள்ள கிரா மங்களில் உள்ளவர்களும், வெளியூரில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக உருவ பொம்மைகள் நேர்த்திக்கடனாக இந்த கோவிலுக்கு செலுத்து வார்கள்.

    இதற்காக சோழவந்தான் அருகில் உள்ள முள்ளி பள்ளத்தில் நேர்த்திக்கடன் செலுத்தும் உருவ பொம்மை கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து பொம்மை தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட பிச்சை (வயது 68) என்பவர் கூறியதாவது:-

    பொம்மைகள் தயாரிக்க முதலில் கரம்பை அல்லது வண்டல் மண் எடுத்து அதனை சலித்து எடுப்போம். அதனுடன் நீர் சேர்த்து வைக்கோல் சாந்து அல்லது உமி சேர்த்து உருவ பொம்மைகள் அச்சில் வார்க்கப்பட்டு பொம்மை களை தயாரிப்போம். அதன் பின்னர் 4 அல்லது 5 நாட்கள் நிழலிலும், அதன்பின் 2 நாள் வெயிலும் காய வைப்போம். இவ்வாறு ெசய்வதால் பொம்மைகளில் விரிசல் ஏற்படாது.

    இதன்பின் சமதளத்தில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டு உறி மட்டைகள் அல்லது தேங்காய் மட்டைகள் வைத்து குறைந்தபட்சம் 4 மணி நேரம் வேக வைக்கப்படும். இந்த பொம்மைகள் சுட்டபின் கலர் வர்ணங்கள் தீட்டப்படும். எங்கள் குடும்பம் உள்பட இன்னும் 2 குடும்பங்கள் வாழையடி வாழையாக இந்த தொழிலை செய்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
    • போராட்டம் காரணமாக மாநகராட்சி அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    திருப்பூர் :

    தமிழக சட்டமன்றம் நேற்று கூடியது.அப்போது தமிழக சட்டமன்றத்தில் தமிழக அரசு தயாரித்து வழங்கிய ஆளுநர் உரையில் திராவிட மாடல் ஆட்சி மற்றும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் , அம்பேத்கர் உள்ளிட்ட பெயர்களை குறிப்பிடாமல் பேசிய ஆளுநருக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் .

    இந்தநிலையில் இன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது உருவ பொம்மையை எரிக்க முயற்சித்தனர்.

    இதில் போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

    இதில் கலந்துகொண்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆளுநர் உருவ பொம்மையை செருப்பால் அடித்தும், கிழித்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.இந்த போராட்டம் காரணமாக மாநகராட்சி அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×