search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Product"

    • பல்வேறு பெரிய தொழில் நிறுவனங்களுடன் தொழில் தொடங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
    • தமிழகத்தில் மேலும் விரிவுபடுத்தும் வகையில் ரூ.57 ஆயிரத்து 354 கோடி முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

    சென்னை:

    தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்கவும், சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

    நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

    இந்த மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஆஸ்திரேலியா உள் பட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டுக்காக வந்து உள்ளனர்.

    அதில் 450-க்கும் மேற் பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர்.

    நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்ற மாநாட்டில் முதல் நாளிலேயே ரூ.5½ லட்சம் கோடி அளவுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    ஹூண்டாய், கோத்ரேஜ், டாடா எலக்ட்ரானிக்ஸ், டி.வி.எஸ். வின் பாஸ்ட் உள்பட பல்வேறு நிறுவனங்கள் தங்களது தொழிலை தமிழகத்தில் மேலும் விரிவுபடுத்தும் வகையில் ரூ.57 ஆயிரத்து 354 கோடி முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

    மேலும் பல்வேறு பெரிய தொழில் நிறுவனங்களுடன் தொழில் தொடங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்காக தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஏதுவாக காலணி தயாரிப்பு, ஆடை தயாரிப்பு, போக்குவரத்து விமான உதிரி பாகங்கள், ஏரோஸ்பேஸ், பாதுகாப்புத் துறை தளவாடங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு எலக்ட்ரானிக்ஸ், வேளாண் உணவு, பொறியியல் மின்சார வாகனம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த அமர்வுகளில் நிபுணத்துவம் பெற்ற தொழில் வல்லுநர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர்.

    இன்று 2-ம் நாள் மாநாட்டில் பெரிய தொழில் அதிபர்கள் மட்டுமின்றி சிட்கோ, இண்டஸ்ரியல் எஸ்டேட் பகுதிகளில் தொழில் நடத்தும் குறு-சிறு தொழில் அதிபர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள வருகை தந்துள்ளனர்.

    இதற்காக குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் அரங்கங்களும் அமைக்கப்பட்டு இருந்தது.

    இதில் மின் வாகனம், உணவு மற்றும் வேளாண் தொழில்நுட்பம், நிதி தொழில்நுட்பம், விண்வெளி தொழில்நுட்பம், ஜவுளி வாகன உற்பத்தி, வீட்டு உபயோகப் பொருட்கள், விண்வெளி தொழில் நுட்பம் உள்பட 20-க்கும் மேற்பட்ட துறைகள் சார்ந்து இயங்கும் நிறுவனங்கள் இடம் பெற்றிருந்தன.

    இதில் 20 நிறுவனங்கள் தமிழக அரசால் முதலீட்டு உதவி செய்யப்பட்டதாகும். மேலும் 10 நிறுவனங்கள் பெண்களால் நடத்தப்படுபவையாகும். இதை முதலீட்டாளர்களும், பொது மக்களும் பார்வையிட்டனர்.

    முதலீட்டாளர்கள் முன்னிலையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி விளக்கங்களை கூறினார்கள். இதற்கான அமர்வுகளும் ஒருங்கிணைக்கப்பட்டு இருந்தது. தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குறு-சிறு தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழில்துறை செயலாளர் அருண்ராய் ஆகியோர் முன்னிலையில் இன்றும் தொழில் அதிபர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டனர்.

    இன்று மாலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலீட்டாளர் மாநாட்டுக்கு வந்து நிறைவு பேருரை நிகழ்த்துகிறார். அப்போது அவரது முன்னிலையில் மேலும் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது. அப்போது எத்தனை லட்சம் கோடிக்கு முதலீடுகள் வரப் பெற்றுள்ளன என்ற தகவலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நேர்த்திக்கடன் செலுத்த உருவ பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    • 2 குடும்பங்கள் வாழையடி வாழையாக இந்த தொழிலை செய்து வருகின்றனர்.

    சோழவந்தான்

    புகழ்பெற்ற சோழ வந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டு வருகிற 22-ந் தேதி கொடி யேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. 17 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. சோழவந்தான் மற்றும் சுற்றியுள்ள கிரா மங்களில் உள்ளவர்களும், வெளியூரில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக உருவ பொம்மைகள் நேர்த்திக்கடனாக இந்த கோவிலுக்கு செலுத்து வார்கள்.

    இதற்காக சோழவந்தான் அருகில் உள்ள முள்ளி பள்ளத்தில் நேர்த்திக்கடன் செலுத்தும் உருவ பொம்மை கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து பொம்மை தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட பிச்சை (வயது 68) என்பவர் கூறியதாவது:-

    பொம்மைகள் தயாரிக்க முதலில் கரம்பை அல்லது வண்டல் மண் எடுத்து அதனை சலித்து எடுப்போம். அதனுடன் நீர் சேர்த்து வைக்கோல் சாந்து அல்லது உமி சேர்த்து உருவ பொம்மைகள் அச்சில் வார்க்கப்பட்டு பொம்மை களை தயாரிப்போம். அதன் பின்னர் 4 அல்லது 5 நாட்கள் நிழலிலும், அதன்பின் 2 நாள் வெயிலும் காய வைப்போம். இவ்வாறு ெசய்வதால் பொம்மைகளில் விரிசல் ஏற்படாது.

    இதன்பின் சமதளத்தில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டு உறி மட்டைகள் அல்லது தேங்காய் மட்டைகள் வைத்து குறைந்தபட்சம் 4 மணி நேரம் வேக வைக்கப்படும். இந்த பொம்மைகள் சுட்டபின் கலர் வர்ணங்கள் தீட்டப்படும். எங்கள் குடும்பம் உள்பட இன்னும் 2 குடும்பங்கள் வாழையடி வாழையாக இந்த தொழிலை செய்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பழைய ஜெயங்கொண்டம் பகுதியில் மானாவாரி நிலத்தில் அமோகம்
    • நல்ல வியாபாரம் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

    கரூர்,

    பழையஜெயங்கொண்டம் பகுதியில், நாட்டு துவரம் பருப்பு உற்பத்தி பணியில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த பழைய ஜெயங்கொண்டம், லட்சுமணம்பட்டி, சேங்கல், புதுப்பட்டி ஆகிய இடங்களில் விவசாயிகள் மானாவாரி நிலத்தில் துவரை சாகுபடி செய்திருந்தனர். கடந்த மாதம் துவரை செடிகள் அறுவடை செய்து, செடிகளில் இருந்து துவரை தரம் பிரிக்கப்பட்டது. தரம் பிரிக்கப்பட்ட துவரையை, நாட்டு துவரம் பருப்பு உருவாக்குவதற்கான பணிக ளில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நாட்டு துவரம்பருப்பு உற்பத்தி செம்மண் கொண்டு தண்ணீர் கலவையில் கலந்து கலர் சேர்க்கப்படுகிறது. பின்னர் வெயிலில் உலர்த்தப்படுகி றது. உலர்த்தப்பட்ட துவரை அரவை மிஷினில் அரைக்கப்படுகிறது. இதில் நாட்டு துவரம்பருப்பு தனியாக பிரிக் கப்படுகிறது. இந்த துவரம்பருப்பு நல்ல தரமான சுவையுடன் இருக்கும். இந்த துவரம் பருப்பு கிலோ, 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


    • பல்வேறு வகைகளில் மறுசுழற்சி ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன.
    • ஆடை ரகங்களின் மதிப்பு மென்மேலும் உயரும்.

    திருப்பூர்:

    சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு கைகொடுக்கும்வகையில், உலகளாவிய நாட்டு வர்த்தகர்கள் தங்கள் ஷோரூம்களில், மறுசுழற்சி ஆயத்த ஆடை ரகங்கள் விற்பனையை படிப்படியாக அதிகரித்து வருகின்றனர்.ஆடை தயாரிப்பில் வீணாகும் கழிவு துணியை மீண்டும் பஞ்சாக மாற்றியும், பிளாஸ்டிக் பாட்டில்களை சிதைத்து என பல்வேறு வகைகளில் மறுசுழற்சி ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன.

    தமிழக நூற்பாலைகள், கடந்த மே மாதம் வரை 18 மாதங்கள் தொடர்ந்து ஒசைரி நூல் விலையை உயர்த்தி வந்தன.உற்பத்தி செலவினம் அதிகரிப்பு, நிதி நெருக்கடி, வர்த்தகர்களிடம் ஆடைகளுக்கு போதிய விலை உயர்வு பெறமுடியாமை உள்ளிட்ட காரணங்களால் திருப்பூரில் பல நிறுவனங்கள் மறு சுழற்சி ஆடை தயாரிப்பில் புதிதாக அடியெடுத்துவைத்துள்ளன.

    இது குறித்து திருப்பூர் பின்னலாடை துறை ஆலோசகர் சபரிகிரீஷ் கூறியதாவது:-

    கட்டிங் வேஸ்ட்ஐ சிதைத்து, பஞ்சாக மாற்றி அதனுடன் 50 சதவீதம் பாலியெஸ்டர் இழை கலந்து ஓ.இ., மில்களில், மறுசுழற்சி நூல் தயாரிக்கப்படுகிறது. இந்த நூலில், குளிர் கால ஆயத்த ஆடை ரகங்கள் தயாரிக்கப்பட்டு, ஐரோப்பா, அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.சாயமேற்றிய துணியே சிதைத்து பஞ்சாக மாற்றப்படுகிறது.அதனால், மறுசுழற்சி ஆடை தயாரிப்பில் சாயமேற்றுதல் தவிர்க்கப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.மறுசுழற்சி நூலிழை ரகங்கள் விலை குறைவாக உள்ளதால் ஆடை தயாரிப்பு செலவினம் சீராகவே உள்ளது. கடந்தாண்டு நிர்ணயித்த அதே விலைக்கே இந்தாண்டும் ஆடை விலையை நிர்ணயிக்கமுடிவதால், வர்த்தக வாய்ப்புகளை கைப்பற்றுவதும் எளிதாகிறது.

    குறிப்பிட்ட நிறங்களில் மட்டுமே ஆடை தயாரிக்க முடியும் என்பதுதான் மறுசுழற்சி ஆடை தயாரிப்பில் உள்ள குறையாக பார்க்கப்படுகிறது.ஆனாலும் எதிர்காலத்தில் சர்வதேச அளவில் மறுசுழற்சி ஆடை ரகங்களின் மதிப்பு மென்மேலும் உயரும் என்பதில் சந்தேகமில்லை. பிரான்டட் நிறுவனங்கள், மறுசுழற்சி ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் தரச்சான்று பெற்றிருக்கவேண்டும் என எதிர்பார்க்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

    ×