search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Spare parts"

    • தனியார் செல்போன் டவரில் இருந்த ஜெனரேட்டர், பேட்டரி மற்றும் உதிரி பாகங்கள் ஆகியன கடந்த ஜனவரி மாதம் 10-ந்தேதி திருட்டு போனது.
    • அதன் மதிப்பு 22 லட்சம் ரூபாய் என்றும் தெரியவந்துள்ளது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் பேருந்து நிலையம் அருகே மேகநாதன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் நிறுவப்பட்டு இருந்த தனியார் செல்போன் டவரில் இருந்த ஜெனரேட்டர், பேட்டரி மற்றும் உதிரி பாகங்கள் ஆகியன கடந்த ஜனவரி மாதம் 10-ந்தேதி திருட்டு போனது. அதன் மதிப்பு 22 லட்சம் ரூபாய் என்றும் தெரியவந்துள்ளது.

    இது குறித்து செல்போன் டவர் அமைத்த சென்னையை சேர்ந்த ஜிடிஎல் என்ற தனியார் நிறுவன அதிகாரி தமிழரசன் (வயது 28) என்பவர் தாரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார், வழக்குப் பதிவு செய்து கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • உதிரி பாகங்கள் வாங்க ஒப்புதல் பெறுவதில் ஏற்படும் தாமதத்தால் உரிய நேரத்தில் பணிகளை செய்ய முடியாமல் மின்வாரியம் தவித்து வருகிறது.
    • பல்லடம் மின் பகிர்மான வட்டத்தில் சுமார் 5 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன.

    பல்லடம்:

    பல்லடம், உதிரி பாகங்கள் வாங்க ஒப்புதல் பெறுவதில் ஏற்படும் தாமதத்தால் உரிய நேரத்தில் பணிகளை செய்ய முடியாமல் மின்வாரியம் தவித்து வருகிறது. இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-பல்லடம் மின் பகிர்மான வட்டத்தில் சுமார் 5 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன.இந்த நிலையில் புதிதாக விண்ணப்பிக்கப்படும் மின் இணைப்புகள் மற்றும் ஏற்கனவே உள்ள இணைப்புகள், சேதமடைந்த கம்பங்கள், கம்பிகள் பொருத்துவது என மின்சார உதிரி பாகங்களின் தேவை அதிகம் உள்ளது. கடந்த வருடத்தில், மாவட்ட முதன்மை பொறியாளர் அலுவலகங்கள் மூலம் மின் உதிரிபாகங்கள், உபகரணங்களை நாங்கள் பெற்று வந்தோம்.தற்போது ஆட்சி மாற்றத்துக்குப் பின் மின் கம்பி முதல் மின் கம்பம் வரை அனைத்துக்கும் சென்னை தலைமை அலுவலகத்துக்கு விண்ணப்பித்து பெற வேண்டிய நிலை உள்ளதால், உரிய நேரத்தில் மின் உதிரிபாகங்கள், உபகரணங்களை பெற முடியாமலும்,மேற்கொண்டுள்ள பணிகளும் தாமதமாகின்றன.இது பொதுமக்கள் மத்தியில் மின்வாரியம் மீது அதிருப்தியை ஏற்படுத்துகிறது.எனவே கடந்த காலத்தில் இருந்தது போலவே,மாவட்ட முதன்மை பொறியாளர் அலுவலகங்களிலேயே மின் உதிரிபாகங்கள், உபகரணங்கள், கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×