search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
    X

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

    காவிரி ஆற்றில் இருந்து 3500 கன அடியாக வந்த நீர்வரத்து இன்று 2566 கன அடியாக குறைந்ததால், மேட்டூர் அணையில் நீர்வரத்து குறைந்தது.
    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைணகளின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் கடந்த மாத இறுதியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கடந்த 8-ந் தேதி மேட்டூர் அணைக்கு வந்தது. பின்னர் படிப்படியாக நீர்வரத்து அதிகரித்து நேற்று 3500 கன அடியாக அணைக்கு வந்தது.

    அணைக்கு நேற்று வினாடிக்கு 3500 கன அடியாக வந்த நீர்வரத்து இன்று 2566 கன அடியாக குறைந்தது. நீர் திறப்பின் அளவை விட நீர்வரத்து தொடர்ந்து அதிகமாக காணப்படுவதால் நேற்று 24.55 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 24.88 அடியாக உயர்ந்தது.

    நீர்வரத்து கடந்த சில நாட்களாக அதிகரித்ததால் குடிநீர் தேவைக்காக 500 கனஅடியாக திறக்கப்பட்ட தண்ணீர் திறப்பு நேற்று 1200 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

    இதையடுத்து அணையின் கீழ்மட்ட மதகுகள் வழியாகத் திறக்கப்பட்ட தண்ணீர், நேற்று காலை முதல் அணையின் மின் நிலையத்தின் வழியாக திறந்து விடப்பட்டது.

    மின்நிலையத்தில் ஏற்பட்ட எந்திர கோளாறு காரணமாக 3 மணிநேரத்தில் மீண்டும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. மீண்டும் கீழ்மட்ட மதகுகள் வழியாக தண்ணீரை திறந்து விடப்பட்டுள்ளது.
    Next Story
    ×