search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நான் தினேஷ் கார்த்திக்காக இருந்திருந்தால் ரஸல் கருத்தால் மிகவும் ஏமாற்றம் அடைந்திருப்பேன்: கவுதம் காம்பிர்
    X

    நான் தினேஷ் கார்த்திக்காக இருந்திருந்தால் ரஸல் கருத்தால் மிகவும் ஏமாற்றம் அடைந்திருப்பேன்: கவுதம் காம்பிர்

    நான் தினேஷ் கார்த்திக்காக இருந்திருந்தால் அந்த்ரே ரஸல் கருத்தால் மிகவும் ஏமாற்றம் அடைந்திருப்பேன் என்று கேகேஆர் முன்னாள் கேப்டன் காம்பிர் தெரிவித்துள்ளார். #IPL2019
    ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி இதுவரை 12 ஆட்டத்தில் ஐந்தில் வெற்றி பெற்று 10 புள்ளிகள் பெற்றுள்ளது. அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆப்ஸ் சுற்றை உறுதி செய்யும்.

    சீசன் தொடக்கத்தில் முதல் ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றிருந்தது. அதன்பின் 6 போட்டிகளில் தொடர் தோல்வியை சநித்தது. அந்த அணியின் அந்த்ரே ரஸல் சூப்பர் டூப்பர் ஆட்டத்தை வெளிப்படுத்தியும் பயனில்லை.

    இதனால் விரக்தியடைந்து ரஸல் ‘‘வீரர்கள் அறையில் மகிழ்ச்சியில்லை. சிறந்த ஆட்டத்தை வீரர்கள் வெளிப்படுத்தவில்லை. மோசமான சில முடிவுகள் எடுக்கப்பட்டன’’ என்று தெரிவித்திருந்தார்.

    இதற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் கவுதம் காம்பிர் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

    நான் தினேஷ் கார்த்திக்காக இருந்திருந்தால் ரஸல் கருத்தால் மிகவும் ஏமாற்றம் அடைந்திருப்பேன் என்று கூறிய கவுதம் காம்பிர், மேலும் இதுகுறித்து கூறுகையில் ‘‘ரஸல் பேட்டியில் அணியின் சூழ்நிலை ஏமாற்றம் அளிக்கிறது என்று மட்டும் கூறியிருந்தால், தோல்வியடைந்த விரக்தியில் தவறுதலாக கூறியிருப்பார் என்று எளிதாக எடுத்துக்கொள்ளலாம்.



    ஆனால் மோசமான முடிவு, ஆட்டத்திறன் குறைபாடு என்று கூறியுள்ளார். என்னுடைய கருத்து என்னவெனில் அவர் இப்படி கூறியிருக்கக்கூடாது. அவருடைய எமோசனை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், நான் தினேஷ் கார்த்திக்காக இருந்திருந்தால், கட்டாயம் எனக்கு அது வருத்தத்தை கொடுத்திருக்கும்.

    யாரும் தோல்வியை விரும்பமாட்டார்கள். யாரும் மோசமான முடிவை எடுக்க விரும்பமாட்டார்கள். கேகேஆர் சில வழக்கமான முடிவகளைத்தான எடுத்துள்ளது. இதை பேட்டியின்போது சொல்ல வேண்டிய அவசியம் இல்லை’’ என்றார்.
    Next Story
    ×