search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷிரேயாஸ் கோபால் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தி சாதனை
    X

    ஷிரேயாஸ் கோபால் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தி சாதனை

    பெங்களூர் அணிக்கெதிரான நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் வீரர் ஷிரேயாஸ் கோபால் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். #ShreyasGopal #IPL2019 #RCBvsRR
    ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் - ராஜஸ்தான் அணிகள் மோதிய நேற்றைய ஆட்டம் மழையால் பாதியில் ரத்தானது. 5 ஓவர்களாக குறைத்தும் மழை பாதிப்பு இருந்ததால் கைவிடப்பட்டது.

    இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீரர் ஷிரேயாஸ் கோபால் தொடர்ந்து 3 பந்துகளில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை புரிந்தார்.

    ஆட்டத்தின் 2-வது ஓவரை அவர் வீசினார். 4-வது பந்தில் விராட் கோலியையும், 5-வது பந்தில் டிவில்லியர்சையும், 6-வது பந்தில் ஸ்டோனிசையும் ‘அவுட் செய்தார்.

    கர்நாடகாவை சேர்ந்த 25 வயது வீரரான ஷிரேயாஸ் கோபால் பெங்களூர் அணிக்கு எதிராக ‘ஹாட்ரிக்‘ முத்திரை பதித்து இருக்கிறார்.

    ஐ.பி.எல். போட்டியில் ஹாட்ரிக் சாதனை 19-வது நிகழ்வாகும். இந்த ஐ.பி.எல். தொடரில் 2-வது ‘ஹாட்ரிக்‘ சாதனை புரிந்து வீரர் என்ற பெருமையை கோபால் பெற்றார். ஏப்ரல் 1-ந்தேதி டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப்பை சேர்ந்த சாம் கரண் (இங்கிலாந்து) ‘ஹாட்ரிக்‘ சாதனை புரிந்து இருந்தார். ஒட்டு மொத்தத்தில் 16-வது வீரர் ஆவார்.

    அமித்மிஸ்ரா அதிகபட்சமாக 3 முறை ஹாட்ரிக் சாதனை புரிந்துள்ளார். அதற்கு அடுத்தப்படியாக யுவராஜ் சிங் 2 முறை ‘ஹாட்ரிக்’ சாதனை புரிந்து உள்ளார்.

    2015, 2018 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே ஹாட்ரிக் நிகழ்த்தவில்லை.

    ஐ.பி.எல்.லில் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்த வீரர்கள் வருமாறு:-

    அமித் மிஸ்ரா (2008, 2011, 2013), யுவராஜ் சிங் (2009-ல் 2 முறை), எல்.பாலாஜி, நிதினி (2008), ரோகித் சர்மா (2009), பிரவீண் குமார் (2010), அஜீத் சண்டிலா (2012), சுனீல் நரீன் (2013), பிரவீண் தாம்போ, வாட்சன் (2014), அக்‌ஷர் பட்டேல் (2016), சாமுவேல் பத்ரி, ஆண்ட்ரூ டை, ஜெய்தேவ் உனட்கட் (2017), சாம் கரண், ஷிரேயாஸ் கோபால் (2019). #ShreyasGopal #IPL2019 #RCBvsRR
    Next Story
    ×