search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2வது ஒருநாள் போட்டி: இந்தியாவின் அதிரடி தொடருமா?- நியூசிலாந்துடன் நாளை மோதல்
    X

    2வது ஒருநாள் போட்டி: இந்தியாவின் அதிரடி தொடருமா?- நியூசிலாந்துடன் நாளை மோதல்

    இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நாளை மவுண்ட் மன்கன்யில் நடக்கிறது. இப்போட்டி இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. #NZvIND
    பேலூரில்:

    இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    5 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் நேப்பியரில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நாளை மவுண்ட் மன்கன்யில் நடக்கிறது. இப்போட்டி இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது.

    இந்திய அணி பேட்டிங்கில் ஷிகர் தவான், ரோகித் சர்மா, கேப்டன் விராட்கோலி, அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், டோனி ஆகியோர் உள்ளனர்.

    பந்து வீச்சில் முகமது சமி, சாகல், குல்தீப் யாதவ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். மேலும் புவனேஸ்வர் குமார், ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் ஆகியோரும் உள்ளனர்.

    பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து கூறி இடைநீக்கம் செய்யப்பட்ட ஹர்த்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் மீதான நடவடிக்கையை கிரிக்கெட் வாரியம் ரத்து செய்துள்ளது.

    இதையடுத்து ஹர்த்திக் பாண்ட்யா நியூசிலாந்துக்கு புறப்பட்டு இந்திய அணியுடன் இணைகிறார். ஆனால் நாளைய போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பது சந்தேகம்தான்.

    முதல் போட்டியில் வெற்றி பெற்றால்தால் இந்தியா நம்பிக்கையுடன் களம் இறங்கும். ஆனால் நியூசிலாந்து திடீரென எழுச்சி பெற கூடிய அணியாகும். இதனால் இந்தியா கவனமுடன் விளையாட வேண்டியது அவசியம்.

    நாளைய போட்டியிலும் இந்தியாவின் அதிரடி தொடருமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து முதல் ஆட்டத்தில் தோற்றதால் நெருக்கடியில் உள்ளது. அந்த அணி பேட்டிங்கில் வில்லியம்சஸ் தவிர மற்ற வீரர்கள் முதல் ஆட்டத்தில் சொற்ப ரன்னில் அவுட் ஆனார்கள்.

    இதனை சரி செய்ய அந்த அணி வீரர்கள் முயற்சிப்பார்கள். நாளைய ஆட்டத்தில் தோற்றால் நியூசிலாந்து கடும் நெருக்கடிக்கு தள்ளப்படும். இதனால் வெற்றி பெற கடினமாக போராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #NZvIND
    Next Story
    ×