search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் ஆயிரம் ரன்கள் குவித்து கோலி சாதனை
    X

    தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் ஆயிரம் ரன்கள் குவித்து கோலி சாதனை

    டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 3-வது ஆண்டாக ஆயிரம் ரன்களை குவித்து சாதனை படைத்துள்ள கோலிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. #INDvWI #ViratKohli
    ராஜ்கோட்:

    ராஜ்கோட்டில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் கேப்டன் விராட் கோலி 139 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    இதன்மூலம் 24-வது சதத்தை எட்டிய கோலி பல்வேறு சாதனைகளை தன்வசப்படுத்தி உள்ளார்.
     
    72-வது டெஸ்டில் விளையாடும் விராட் கோலி 123 இன்னிங்சில் பேட்டிங் செய்து 24 சதங்களை அடித்துள்ளார்.

    விராட் கோலி இந்த ஆண்டில் இதுவரை 4 சதம், 4 அரைசதங்கள் உள்பட 1,018 ரன்கள் (9 டெஸ்ட்) சேர்த்துள்ளார். இந்த ஆண்டில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் கோலி தான். அவருக்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் (10 டெஸ்டில் 719 ரன்) இருக்கிறார்.



    விராட் கோலி தொடர்ந்து 3 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் ஆயிரம் ரன்களை கடந்து அசத்தியுள்ளார்.

    இவர் ஏற்கனவே 2016-ம் ஆண்டில் 1,215 ரன்களும், 2017-ம் ஆண்டில் 1,059 ரன்களும் எடுத்துள்ளார். இதனால் தொடர்ந்து 3 ஆண்டுகளில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்தியர் இவர் என்பதும், ஒட்டுமொத்த அளவில் 6-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
     
    ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன் (தொடர்ந்து 5 ஆண்டு), ஸ்டீவன் சுமித் (4 ஆண்டு), வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா, இங்கிலாந்தின் டிரஸ்கோதிக், கெவின் பீட்டர்சன் (தலா 3 ஆண்டு) ஆகியோர் இச்சாதனை பட்டியலில் இடம் பிடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #INDvWI #ViratKohli
    Next Story
    ×