search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய விளையாட்டு போட்டி - இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட பிரதமர் வாழ்த்து
    X

    ஆசிய விளையாட்டு போட்டி - இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட பிரதமர் வாழ்த்து

    இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். #AsianGames2018 #Modi
    புதுடெல்லி:

    18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் இன்று தொடங்கி செப்டம்பர் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், ஈரான், மலேசியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    தடகளம், வில்வித்தை, டென்னிஸ், பேட்மிண்டன், பளுதூக்குதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, ஆக்கி,  கால்பந்து, நீச்சல், துப்பாக்கி சுடுதல் உள்பட 40 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்திய அணியில் இடம் பிடித்துள்ள 572 வீரர், வீராங்கனைகள் 36 பந்தயங்களில் களமிறங்குகின்றனர். 

    இந்நிலையில், இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்புடன் செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி டுவிட்டரில் கூறுகையில், இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  நமது வீரர்கள் அவர்களது சிறந்த பங்களிப்பை நல்குவார்கள் என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். #AsianGames2018 #Modi
    Next Story
    ×