search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக கோப்பை கால்பந்து - இஸ்ரேல் உடனான பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்தது அர்ஜெண்டினா
    X

    உலக கோப்பை கால்பந்து - இஸ்ரேல் உடனான பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்தது அர்ஜெண்டினா

    இஸ்ரேல் - அர்ஜெண்டினா அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த பீபா கால்பந்து பயிற்சி ஆட்டம் காஸா வன்முறையில் 123 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளது. #ArgentinavsIsrael #FIFAWorldCup #WarmUpMatch #GazaViolence

    ஜெருசலேம்:

    21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 14-ந் தேதி ரஷியாவில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் அணிகள் வெவ்வேறு அணிகளுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. அந்த வகையில் வருகிற 9-ம் தேதி இஸ்ரேல் - அர்ஜெண்டினா அணிகள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த போட்டி ஜெருசலேம் நகரில் நடைபெறுவதாக இருந்தது.

    இந்நிலையில், இந்த போட்டியில் அர்ஜெண்டினா அணி விளையாடுவதற்கு பாலஸ்தீன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், அப்படி அர்ஜெண்டினா அணி ஜெருசலேம் நகரில் கால்பந்து விளையாடினால் அர்ஜெண்டினா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சியின் ஜெர்சி மற்றும் படத்திற்கு தீவைக்குமாறு பாலஸ்தீன அரசியல் தலைவர் ஒருவர் தெரிவித்தார். 

    இதையடுத்து, இஸ்ரேல் உடனான பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்வதாக அர்ஜெண்டினா அறிவித்துள்ளது.  இஸ்ரேல் - பாலஸ்தீன எல்லையான காஸா முனைப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் மற்றும் பாலஸ்தீன மக்கள் இடையே மோதல் நடந்து வருகிறது. சமீபத்தில், இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில் 123 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #ArgentinavsIsrael #FIFAWorldCup #WarmUpMatch #GazaViolence
    Next Story
    ×