search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் 2018 இறுதிப்போட்டி: ஐதராபாத் 6 ஓவரில் 42/1
    X

    ஐபிஎல் 2018 இறுதிப்போட்டி: ஐதராபாத் 6 ஓவரில் 42/1

    மும்பையில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்துவரும் ஐதராபாத் அணி 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்துள்ளது. #IPL2018 #VIVOIPL #CSKvSRH #Finals

    மும்பை:

    11-வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று மாலை 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் விளையாடி வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி, பேட்டிங் தேர்வு செய்தார். 

    இதையடுத்து ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி, ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரை சென்னை அணியின் தீபக் சஹார் வீசினார். அந்த ஓவரில் ஐதராபாத் அணிக்கு 6 ரன்கள் கிடைத்தது. 

    இரண்டாவது ஓவரை நிகிடி வீச, அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் கோஸ்வாமி 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து கேப்டன் வில்லியம்சன் களமிறங்கினார். 2 ஒவர் முடிவில் ஐதராபாத் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 8 ரன்கள் எடுத்தது.

    3-வது ஓவரை மீண்டும் சஹார் வீசீனார். அந்த ஓவரில் அவர் 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். 4-வது ஓவரை நிகிடி வில்லியம்சனுக்கும் மேய்டனாக வீசினார். 5-வது ஓவரை சஹார் வீச, அந்த ஓவரில் வில்லியம்சன் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் ஐதராபாத் அணிக்கு 13 ரன்கள் கிடைத்தது.

    ஆறாவது ஓவரை சர்துல் தாகூர் வீச அந்த ஓவரில் ஐதராபாத் அணிக்கு 12 ரன்கள் கிடைத்தது. ஐதராபாத் அணி 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு  ரன்கள் எடுத்துள்ளது. தவான் 18 ரன்களுடனும், வில்லியம்சன் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். #IPL2018 #VIVOIPL #CSKvSRH #Finals
    Next Story
    ×