search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கெய்ல், டி வில்லியர்ஸ் செய்ததை ஒருபோதும் செய்யமாட்டேன்- கேன் வில்லியம்சன்
    X

    கெய்ல், டி வில்லியர்ஸ் செய்ததை ஒருபோதும் செய்யமாட்டேன்- கேன் வில்லியம்சன்

    கெய்ல், டி வில்லியர்ஸை போல் அதிரடியாக விளையாட ஒருபோதும் முயற்சி செய்யமாட்டேன் என கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். #SRH #IPL2018
    நியூசிலாந்து அணியின் கேப்டனாக திகழ்பவர் கேன் வில்லியம்சன். இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். இவர் ஐபிஎல் தொடரில் 2015-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக களம் இறங்கினார்.

    முன்னணி பேட்ஸ்மேனாக இருந்தாலும், நான்கு வெளிநாட்டு வீரர்களுடன் விளையாட வேண்டும் என்பதால் ஐதராபாத் அணியில் சீசன் முழுவதும் விளையாடியது கிடையாது. 2015 சீசனில் 2 போட்டி, 2016 சீசனில் 6 போட்டி, 2017 சீசனில் 7 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக இருந்த டேவிட் வார்னர் பந்தை சேதப்படுத்துதல் விவகாரத்தில் சிக்கி ஒரு வருடம் விளையாட தடைபெற்றுள்ளார். இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் அனைத்து போட்டிகளிலும் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.



    இந்த சீசனில் 5 போட்டிகளில் விளையாடி 230 ரன்கள் அடித்துள்ளார். இதில் மூன்று முறை அரைசதங்கள் அடித்துள்ளார். சிறப்பாக விளையாடி வரும் கேன் வில்லியம்சன், தன்னால் கிறிஸ் கெய்ல், டி வில்லியர்ஸ் போன்று அதிரடியாக விளையாட முடியாது என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்து கேன் வில்லியம்சன் கூறுகையில் ‘‘ஆட்டத்தின் நிலைமை மற்றும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு என்னை மாற்றிக் கொண்டு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த எப்போதும் நான் முயற்சி செய்வேன். என்னால் எவ்வாறு அடிக்க முடியுமோ, அந்த அளவிற்கு சிறந்த ஆட்டத்ததை வெளிப்படுத்த முயற்சி செய்வேன்.



    ஏபி டி வில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல் போன்று விளையாட முயற்சி செய்யமாட்டேன். அதுபோன்ற நிகழ்வு நடைபெற வாய்ப்பே இல்லை’’ என்றார்.
    Next Story
    ×