search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழைக்குப்பின் 29 பந்தில் 28 ரன் என்பது ஆச்சரியம் அளித்தது- தினேஷ் கார்த்திக்
    X

    மழைக்குப்பின் 29 பந்தில் 28 ரன் என்பது ஆச்சரியம் அளித்தது- தினேஷ் கார்த்திக்

    பஞ்சாப் அணிக்கு சராசரியாக 8 ரன்களுக்கு மேல் தேவைப்படும் நிலையில் 28 பந்தில் 29 ரன் என நிர்ணயித்தது குறித்து தினேஷ் கார்த்திக் கேள்வி எழுப்பியுள்ளார். #KKRvKXIP
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 191 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் கிறிஸ் கெய்ல், கேஎல் ராகுல் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரின் அதிரடியால் பஞ்சாப் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

    பஞ்சாப் அணி 8.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 96 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது. சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது.

    டக்வொர்த் லிவிஸ் விதிப்படி பஞ்சாப் அணி 13 ஓவரில் 125 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி 28 பந்தில் 29 ரன்களே தேவைப்பட்டது. மழை பெய்யும்போது 70 பந்த்தில் (11.4) 96 ரன்கள் தேவைப்பட்டது. ஒரு ஓவருக்கு சுமார் 9 ரன்கள் தேவைப்பட்டது.



    20 ஓவர்கள் ஆட்டமாக இருந்திருந்தால், பஞ்சாப் அணி இன்னும் குறைந்தது 8 ஓவர்களுக்கு மேல் விளையாடியிருக்கும். அந்தநிலையில் கிறிஸ் கெய்ல், கேஎல் ராகுல் விக்கெட்டுக்களை நாங்கள் வீழ்த்தியிருந்தால் பஞ்சாப் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கும். ஓவர்கள் செல்லசெல்ல ரன்தேவை அதிகரித்துக்கும்.

    இந்நிலையில் 28 பந்திற்கு 29 ரன்கள் என்பது ஆச்சர்யம் அளிக்கிறது. ஐபிஎல் தொடரில் டக்வொர்த் லிவிஸ் விதிமுறைக்குப் பதிலாக உள்ளூர் தொடரில் கடைபிடிக்கப்படும் வி ஜெயதேவன் என்ற விஜேடி முறையை பின்பற்றலாம் என தனது ஆலோசனை தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×